ETV Bharat / state

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு - நீதிமன்றம் உத்தரவு! - Pudukkottai

EX minister Vijayabaskar Assets Case Adjourned: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை தொடர்ந்த வழக்கில் 16 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

ex minister vijayabaskar assets case adjourned december 20
விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு 20ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 2, 2023, 8:23 PM IST

புதுக்கோட்டை: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வருமானத்தை விட 55 சதவிகிதம் அதிகமாக சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் தலா 16 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு இருவரிடமும் வழங்கப்பட்டன. ஆனால், இருவரும் குற்றப்பத்திரிகை நகல்களில் ஒரு சிலவை இல்லாமல் இருப்பதாகக் கூறி, மீண்டும் தங்களுக்கு குற்றப்பத்திரிகை நகல்கள் வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு இன்று (டிச. 2) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா கோரிக்கையினை ஏற்று 16 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை நகல்களை இருவரிடமும் மீண்டும் ஒப்படைப்பதற்கு சம்மதம் தெரிவித்து அதை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

இந்த நிலையில், இன்றைய வழக்கின் போது விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர்களுக்கு பதிலாக அவர்களது வழக்கறிஞர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அதைத் தொடர்ந்து, வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி பூரண ஜெய் ஆனந்த், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மீண்டும் வழங்கிய தலா 16 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல்களை, விஜயபாஸ்கர் வழக்கறிஞர்களிடம் ஒப்படைத்து வழக்கு விசாரணையை வரும் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ஆசிரியை, ஆசிரியர் மாயம்.. ரத்தக் கறையுடன் நின்ற கார்.. கோவையில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.