ETV Bharat / state

'எனது கஷ்டத்தை வெளிக்கொண்டு வந்து, உதவி செய்த ஈடிவிக்கு ரொம்ப நன்றி'

புதுக்கோட்டை: தனக்கு தூய்மைப் பணி கிடைத்தால் கூட போதும், நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் கிடைத்தாலும் தன்னோட குடும்பத்தின் பசியை ஆற்றிவிடுவேன் என ஈடிவி பாரத்திடம் வேதனை தெரிவித்த தனலெட்சுமி என்ற பெண்ணுக்கு, தமது செய்தியின் எதிரொலியாக தற்போது தற்காலிக அரசுப் பணி கிடைத்துள்ளது.

ETV bhart impact: pudukottai girl danalaxshmi got temporary govt job

author img

By

Published : Jul 3, 2020, 4:44 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த 27 வயதான தனலெட்சுமி என்பவர் வயதான தாய், தந்தையருடன், காது கேட்க முடியாத ஒரு சகோதரி, காது கேட்காத மற்றும் வாய்ப் பேச முடியாத மூன்று சகோதரிகள், அதேபோல காது மற்றும் வாய்ப் பேச முடியாத இரண்டு சகோதரர்களுடன் வசித்துவருகிறார். குடும்பத்தில் தன்னுடன் பிறந்த அனைவரும் குறைபாடுகளுடன் பிறந்துள்ள நிலையில், அனைவரையும் கரை சேர்க்கும் பொறுப்பை சுமந்து, வேறு வேலை எதுவும் கிடைக்காமல் வீட்டு வேலை செய்து மாதத்திற்கு இரண்டாயிரம் ரூபாய் வருமானத்தில் குடும்பத்தை நடத்திவந்தார்.

சிறிய குடிசை வீட்டிற்குள் வாழ்க்கையை நடத்தி வந்த இவர்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட கஜா புயலின் போது, வறுமையின் விளிம்பிற்கே தள்ளப்பட்டனர். இதையடுத்து, கஜா புயலினால் பாதிக்கப்பட்டவர்களிடம் ஈடிவி பாரத் நேரடியாக சென்று செய்தி சேகரித்து வெளியிட்டுவந்தது. அப்போது, வறுமையின் பிடியில் சிக்குண்டிருந்த தனலெட்சுமியை சந்தித்து செய்தி சேகரித்து வெளியிட்டது ஈடிவி. அதன் பலனாக, அவரின் குடும்பத்திற்கு தேவையான உணவு பொருள்கள் கிடைத்தன.

தற்போது நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனா வைரஸ் தொற்றினைக் கட்டுப்படுத்தும் வகையில் அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்கள் குறித்து ஈடிவி களப்பணியாற்றிவருகிறது.

இந்த ஊரடங்கில், தனலெட்சுமியின் குடும்பத்தினரை சந்தித்த ஈடிவி பாரத் அவர்களது கஷ்டங்களைப் பதிவு செய்து வெளியிட்டது. இந்தச் செய்தி மாவட்டம் முழுவதும் சென்றடைந்து, பல்வேறு அமைப்பினரும் அக்குடும்பத்திற்கு நிவாரண பொருள்கள் மற்றும் உணவுப் பொருள்களை வழங்கினர். புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியன் அம்மா உணவகத்தில் இருந்து இவரது குடும்பத்தினருக்கு மூன்று வேளை உணவு வழங்கவும் ஏற்பாடு செய்தார்.

பின்னர், நமது செய்தியைக் கண்ட புதுக்கோட்டை நகராட்சி ஆணையர், இது போன்ற குடும்பம் நமது நகராட்சியில் இருப்பதே தெரியாது. உங்களது செய்தி பார்த்தது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அவர்களுக்கு நிச்சயம் ஏதேனும் உதவி செய்ய வேண்டும். தனலெட்சுமிக்கு நகராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக வேலை போட்டு தருகிறேன் என நமது நிருபரிடம் உறுதியளித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து தனலெட்சுமியின் குடம்பத்தினர் குறித்த செய்தி வேகமாக பரவவே, கடந்த வாரம் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தனலெட்சுமிக்கு தற்காலிக தூய்மைப் பணியாளர் பணிக்கு கையெழுத்திட்டு ஆணை வழங்கினார்.

இந்த பணி கிடைத்ததற்காக புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்திற்கும், நகராட்சிக்கும், தங்களது கஷ்டத்தை வெளிக்கொண்டு வந்ததற்கும் ஈடிவி நிறுவனத்திற்கும் தனலெட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டற்ற மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்தனர்.

ஈடிவி பாரத் செய்தியால் பயனடைந்த தனலெட்சுமி

இனி தன் குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் தீரும் என்ற நம்பிக்கை உள்ளதாக நெகிழ்ச்சியுடன் கூறினர். மேலும், மக்களுடன் இணைந்து பணியாற்றி இதுபோன்ற சம்பவங்களை வெளியுலகிற்கு கொண்டு வந்து ஒரு குடும்பத்திற்கு உதவி செய்துள்ளீர்கள் என புதுக்கோட்டை மாவட்ட நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியன் ஈடிவி பாரத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'பாத்ரூம் கழுவுற வேல கொடுத்தாக்கூட போதும்... குடும்பத்தக் கரை சேத்துருவேன்' - கண்ணீருடன் கதறும் பெண்ணின் உருக்கமான கதை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.