புதுக்கோட்டை: ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை தமிழக அரசே அகற்றுவது என்று முடிவு செய்துள்ளது. முதலமைச்சரின் இந்த முடிவு அனைத்து தரப்பு மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதேபோன்று கூடங்குளத்தில் உள்ள அணுக்கழிவுகளை மத்திய அரசு அகற்ற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். கூடங்குளத்தைபொறுத்தவரை தமிழக அரசு அங்குள்ள கழிவுகளை அகற்றும் பணியில் கண்டிப்பாக ஈடுபடாது. மத்திய அரசுதான் அங்குள்ள அணுக்கழிவுகளை அகற்ற வேண்டும் என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களை இது குறித்து சந்தித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக, சிறப்பாக வாதாடி தமிழகத்தில் ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்த வழிவகை செய்த தமிழக முதலமைச்சருக்கு ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் ஆர்வலர்கள் சார்பில் புதுக்கோட்டையில் வரும் ஐந்தாம் தேதி முதலமைச்சருக்கு பாராட்டு விழா மற்றும் 'ஜல்லிக்கட்டு பாதுகாவலர்' என்ற பட்டம் வழங்கும் விழாவும் நடைபெற உள்ளது.
இதற்காக புதுக்கோட்டையில் பிரமாண்டமான பந்தல் அமைக்கும் பணி வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பணியை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 'ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை தமிழக அரசே அகற்றுவது என்று முடிவு செய்துள்ளது. முதலமைச்சரின் இந்த முடிவு அனைத்து தரப்பு மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதேபோன்று கூடங்குளத்தில் உள்ள அணுக்கழிவுகளை மத்திய அரசு அகற்ற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறினார்.
கூடங்குளத்தை பொறுத்தவரை தமிழக அரசு அங்குள்ள கழிவுகளை அகற்றும் பணியில் கண்டிப்பாக ஈடுபடாது. மத்திய அரசுதான் அங்குள்ள அணுக்கழிவுகளை அகற்ற வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடுக்க வேண்டும் என்பதற்காக தான் தமிழக அரசு 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு தடை செய்தது. இதற்காகத்தான், மாற்று வழியாக 'மஞ்சள் பை' திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் தொடங்கியதற்கு பிறகு 30 சதவீத மக்கள் 'மஞ்சப்பை'-க்கு மாறியுள்ளதாக பேசினார்.
இருப்பினும், பல பகுதிகளில் பிளாஸ்டிக்கை பயன்படுத்தக்கூடிய சூழ்நிலை தற்போதும் நிகழ்ந்து வருகிறது. இதை முற்றிலுமாக தடை செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் மக்கள் மத்தியில் மாற்றம் இருந்தால் மட்டுமே இதனை முற்றிலுமாக பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க முடியும். காவேரி, வைகை, குண்டாறு திட்டத்தைப் பொறுத்தவரை எந்த பாதையில் செல்வதற்கு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதோ, அந்தப் பாதையில் மட்டுமே செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
மாற்றுப்பாதையில் செயல்படுத்தப்படாது. அதே போன்று, விராலிமலையில் தனியார் மதுபான ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் குடிநீர் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து ஆய்வு செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "தேசத் துரோக சட்டம் அவசியம்" மத்திய சட்ட அமைச்சகத்துக்கு 22வது சட்ட ஆணையம் பரிந்துரை!