ETV Bharat / state

’மாவட்ட ஆட்சியருக்கு தோசை மாவு; கோட்ட பொறியாளருக்கு பருப்பு கடையும் மத்து’ - மாவட்ட ஆட்சியருக்கு தோசை மாவு அவார்டு

புதுக்கோட்டை: ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய நீதிமன்ற உத்தரவை கண்டுகொள்ளவில்லை என்று கூறி மாவட்ட ஆட்சியர், கோட்டப் பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு விதவிதமான விருதுகள் வழங்கி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

poster
poster
author img

By

Published : Feb 27, 2021, 1:40 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த துரை குணா, கடந்த மாதம் அரசு அதிகாரிகளுக்கு சட்ட வகுப்பு எடுக்கப்போவதாக போஸ்டர் ஒட்டி பரபரப்பை கிளப்பினார். தற்போது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு இரண்டு பாக்கெட் தோசை மாவு அவார்டு வழங்குவதாக போஸ்டர் ஒட்டி மேலும் பரபரப்பாக்கியுள்ளார்.

கறம்பக்குடி-புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வழிபாட்டுத்தலம், கட்டுமானங்களை அகற்றக்கோரி வழக்குத் தொடர்ந்து அதில் வெற்றி பெற்று ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணை பெற்றார் துரை குணா. இந்நிலையில், நீதிமன்றம் ஆணையிட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருக்கும் அதிகாரிகளை கண்டித்து, அவர்களுக்கு அவார்டு வழங்கப்போவதாக நகரின் முக்கியப் பகுதிகள் மற்றும் பொதுக் கழிப்பிடங்களில் போஸ்டர் ஒட்டியுள்ளார்.

தர்மயுத்தம் பன்னீர் விருது ’சிட்டுக்குருவி லேகியம்’ உதவி கோட்டப் பொறியாளருக்கு...

அந்த போஸ்டரில் “ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் மாண்புமிகு நீதியரசர்கள் பிறப்பித்த உத்தரவு வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்தாத துணிச்சல் மிக்க அதிகாரிகளை பாராட்டி கெளரவிக்கும் விதமாக, குட்கா அமைச்சரின் ஸ்லீப்பர் செல் விருது மாவட்ட ஆட்சித் தலைவருக்கு ’இரண்டு பாக்கெட் தோசைமாவு’ அவார்டு, எடப்பாடியார் விருது ’பருப்பு கடையும் மத்து’ நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளருக்கும், தர்மயுத்தம் பன்னீர் விருது ’சிட்டுக்குருவி லேகியம்’ உதவி கோட்டப் பொறியாளருக்கும் வழங்கப்படுகிறது.

சொல் அகராதியின் தந்தை எச். ராஜா விருது, ’மூலம், பவுத்திரம் வைத்திய குறிப்புகள் அடங்கிய கையேடு’ உதவிப் பொறியாளருக்கும் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. பின்குறிப்பு, எடப்பாடியார் விருது பெறுவோர் கண்டிப்பாக தவழ்ந்து வந்து வாங்கக் கூடாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தையே பரபரப்பாக்கியுள்ள இவரது போஸ்டர், சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

'என் மீது நடவடிக்கை எடுத்தாலும் பரவாயில்லை, இப்பிரச்சனைக்கு ஒரு தீர்வு வேண்டும்'

இது குறித்து துரை குணாவிடம் நாம் பேசியபோது, ”முன்பெல்லாம் போராட்டம் என்றால் 100 பேரை திரட்டி கத்தி கூப்பாடு போட வேண்டியிருந்தது. தற்போது எந்த கோரிக்கையாக இருந்தாலும் மின்னஞ்சலில் கூட அனுப்பலாம். இந்நிலையில் எந்த ஒரு புகாரையும், மனுவையும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது மிகவும் கண்டிக்கதக்கது. இந்த போஸ்டர் ஒட்டப் போவதாக மாவட்ட எஸ்.பிக்கு அனுமதி மனுவை தபாலில் அனுப்பி விட்டேன். ஆனால், எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை. இதற்காக என் மீது நடவடிக்கை எடுத்தாலும் பரவாயில்லை. ஆனால் இப்பிரச்சனைக்கு ஒரு தீர்வு வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: பயணிகள் ரயிலை இயக்க வலியுறுத்தி திருப்பூரில் அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.