ETV Bharat / state

'பாஜக ஆட்சியை குற்றம்சாட்டுவது சரியானது அல்ல'

author img

By

Published : Nov 20, 2019, 11:35 PM IST

புதுக்கோட்டை: பாஜக ஆட்சியில் சிறுபான்மை மக்கள், பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் என குற்றம்சாட்டுவது சரியானது அல்ல என்று தேசிய சிறுபான்மையினர் நலத் துணைத்தலைவர் ஜார்ஜ் குரியன் தெரிவித்தார்.

தேசிய சிறுபான்மையினர் நலத் துணைத்தலைவர் செய்தியாளர்ச் சந்திப்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் பிரதம மந்திாியின் ஜன்விகாஸ் காாியக்ரம் திட்டம் (சிறுபான்மை இனபெண்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் கல்வி மேம்பாட்டு திட்டம்) தொடா்பான அரசு அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் தேசிய சிறுபான்மை நல ஆணையத் துணைத் தலைவா் ஜாா்ஜ் குாியன் தலைமையில் நடைபெற்றது.

அப்போது சார்ஜ் குரியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில், “சிறுபான்மை பெண்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பை முன்னேற்றுவதற்காக கடந்த 2011ஆம் ஆண்டு ஜன்விகாஸ் காாியக்ரம் திட்டம் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் இத்திட்டத்திற்காக 12 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு இந்தியா முழுவதும் 319 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

சிறுபான்மை மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை பல்வேறு காரணங்களுக்காக உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் சிறுபான்மை மாணவர்கள் அரசுத் துறை தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.” எனக் கூறினார்.

தேசிய சிறுபான்மையினர் நலத் துணைத்தலைவர் செய்தியாளர்ச் சந்திப்பு

தொடர்ந்து பேசிய அவர் ''இந்திய அளவில் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. அதில் சிறுபான்மையினர்களும் அடங்குவர். பாஜக ஆட்சியில் சிறுபான்மை மக்கள், பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று குற்றம்சாட்டுவதும் அவர்கள் மீது தவறான கருத்துகள் பரப்புவதும் சரியானது அல்ல'' என்றார்.

இதையும் படிங்க...பெண்ணை தரக்குறைவாக பேசியதால் பேருந்து சிறைபிடிப்பு!

Intro:பிஜேபி ஆட்சியில் சிறுபான்மை மக்கள் ,பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று குற்றம் சாட்டுவது சரியானது அல்ல.
புதுக்கோட்டையில் தேசிய சிறுபான்மையினர் நல துணைத்தலைவர் ஜார்ஜ் குரியன் பேட்டி.
Body:
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் பிரதம மந்திாியின் ஜன்விகாஸ் காாியக்ரம் திட்டம் (சிறுபான்மை இனபெண்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் கல்வி மேம்பாட்டு திட்டம்)தொடா்பான அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் தேசிய சிறுபான்மை நல ஆணையத் துணைத் தலைவா் ஜாா்ஜ் குாியன் தலைமையில் நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த சார்ஜ் குரியன் கூறுகையில்:

சிறுபான்மை பெண்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பை முன்னேற்றுவதற்காக கடந்த 2011 ஆம் ஆண்டு இத்திட்டம் ஜன்விகாஸ் காாியக்ரம் திட்டம் தொடங்கப் பட்டு தமிழகத்தில் இத்திட்டத்திற்காக 12 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்றும்
2018ம் ஆண்டு இத்திட்டத்திற்காக ஆயிரம் ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு இந்தியா முழுவதும் 319 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.
இதில் சிறுபான்மை மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை பல்வேறு காரணங்களுக்காக உதவித்தொகை வழங்கப்படுகிறது என்றும்,

இத்திட்டத்தின் மூலம் சிறுபான்மை மாணவர்கள் அரசு துறை தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது, என்றும் 2.5 லட்சம் நிதி வெளிநாடுகளில் பட்டப்படிப்பு படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் ஆய்வு சார்ந்த படிப்பு படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு மாதம் 28000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தென் மாநிலங்களில் இத்திட்டம் குறித்து விழிப்புணர்வு இல்லாமல் மக்கள் உள்ளனர் என்றும் சிறுபான்மை மாணவர்களுக்கு உதவித்தொகை கொடுக்கும் இத்திட்டம் 2006 முதலே மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் இப்போது வரையிலேயே சிறுபான்மை மக்கள் இத்திட்டம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர்.
அதனாலேயே நாங்கள் மாவட்டங்கள் தோறும் சென்று இத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி வருகிறோம்.
‌ இந்திய அளவில் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு தான் வருகிறது, அதில் சிறுபான்மையினர் களும் அடங்குவர் என்றும் பிஜேபி ஆட்சியில் சிறுபான்மை மக்கள் ,பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று குற்றம் சாட்டுவது சரியானது அல்ல. சிறுபான்மை மக்களைப் பாதுகாக்க பாஜக அரசு ஒன்றும் வியாதி அல்ல இதுபோன்ற குற்றங்கள் சரியானது அல்ல தவறான கருத்துக்கள் பரப்பப்படுவது சரியானதல்ல என்று அவர் கூறினார்.
ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் கல்வித்துறை சார்ந்தது, மாணவி பாத்திமா உடன் சேர்த்து இதுவரையில் 5 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் அதில் இருவர் சிறுபான்மையினர், பாத்திமா தற்கொலை விவகாரத்தில் இதனை சிறுபான்மையினருக்கு நடந்த நிகழ்வாக பார்க்கக் கூடாது என்றும் மனிதாபிமான அடிப்படையில் பார்க்க வேண்டும் என்று அவரது தந்தை கூறியிருந்ததாலும் ஒரு கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த சம்பவமாக பார்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்ததாலும் இந்த விஷயத்தில் நாங்கள் தலையிட வில்லை என்று சார்ஜ் குரியன் கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.