புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியக்குழு கவுன்சிலராக வெற்றிபெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஜெயம் தங்கவேலுவிற்கு ஒன்றியக்குழு துணைத்தலைவர் பதவி வாங்கித்தருவதாக கூறி அவரை அன்னவாசல் திமுக ஒன்றிய செயலாளர் சந்திரனும் அவரது அடியாட்கள் கடத்தி பத்து நாள்கள் கொடுமைபடுத்தியுள்ளனர்.
உள்ளாட்சி மறைமுகத் தேர்தலின்போதும் அவரை வாக்களிக்கவிடாமல் மயக்க மருந்து கொடுத்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட ஜெயம் தங்கவேலு திமுக ஒன்றிய செயலாளர் சந்திரன், அவரது அடியாட்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அன்னவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: டெல்டாவில் கோட்டைவிட்ட திமுக' - அதிமுகவுக்கு வாக்களித்த காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள்!