ETV Bharat / state

சீட்டுக்கு துட்டு கேட்ட புதுக்கோட்டை திமுக மா.செ.!

புதுக்கோட்டை: தன் மகனுக்கு பணம் வாங்காமல் வார்டில் சீட் தரக்கோரி திமுக முன்னாள் எம்எல்ஏ ஆலவயல் சுப்பையா, திமுக தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

author img

By

Published : Dec 14, 2019, 6:38 PM IST

Updated : Dec 14, 2019, 6:44 PM IST

DMK district secretary who asked for money for ward membership
DMK district secretary who asked for money for ward membership

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. உள்ளாட்சித் தேர்தல் வேலைகள் சூடுபிடித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், பதவிகளை ஏலம் விடுவது, சீட்டுக்கு பணம் வாங்குவது என உள்ளடி வேலைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் புதுக்கோட்டையிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் திமுக முன்னாள் எம்எல்ஏ ஆலவயல் சுப்பையா. இவருடைய மகன் முரளிதரன், பொன்னமராவதி ஊராட்சி 12ஆவது வார்டின் வார்டு உறுப்பினர் பதவிக்காக விருப்ப மனு கேட்டு அதற்கான நேர்காணலையும் முடித்துள்ளார்.

புதுக்கோட்டை திமுக முன்னாள் எம்எல்ஏ திமுக தலைவருக்கு கடிதம்
புதுக்கோட்டை திமுக முன்னாள் எம்எல்ஏ திமுக தலைவருக்கு கடிதம்

தற்போது சீட் அறிவிக்கும் நேரத்தில், புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ரகுபதி, முரளிதரனை கைப்பேசி மூலமாகத் தொடர்புகொண்டு, ’வார்டு உறுப்பினர் சீட்டுக்கு ரூ. 10 லட்சம் கொடுக்க வேண்டும். தேர்தல் செலவுகளையும் நீங்களே பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்தத் தகவலை அறிந்த சுப்பையா, திமுக தலைமைக் கழகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், இதுபோல் டிமாண்ட் வைக்காமல் தனது மகனுக்கு வார்டில் சீட் தரக்கோரி கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிங்க;

உள்ளாட்சி உங்களாட்சி 14 - மதுவிலக்கு

Intro:Body:தேர்தலில் போட்டியிட திருமயம் திமுக எம்எல்ஏ 10 லஞ்சம் ரூபாய் கேட்டதாக திமுக பிரமுகர் முக.ஸ்டாலினுக்கு கடிதம்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான புதுக்கோட்டை மாவட்டம் ஆலவயல் சுப்பையா தற்போது பொன்னமராவதியில் தனது மகன் முரளிதரன் ஊராட்சி தேர்தலில் போட்டியிட தயாராகிக் கொண்டிருக்கிறார் இந்நிலையில் திருமயம் எம்எல்ஏ திமுக ரகுபதி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 10 லட்சம் லஞ்சம் கேட்டு உள்ளதாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் க்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த கடிதத்தில் அவர் எழுதியிருந்ததாவது,

நான் அரசியலில் நீண்ட காலமாக இருந்து வருகிறேன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த பொழுது எனது மகன் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்தது தற்போது வேட்பாளர்களை அறிவிக்கும் தருவாயில் இருக்கும் நிலையில் திமுக தெற்கு மாவட்ட கழக செயலாளர் ரகுபதி என்னிடம் 10 லட்சம் கொடுத்தால் சீட்டு தருகிறேன் மற்ற செலவை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார். ஒரே கட்சியில் இருந்து கொண்டு இது போன்ற செயல்களை ஏற்க முடியாது என்று அந்த கடிதத்தில் எழுதி திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆலவயல் சுப்பையா மகன் முரளிதரன் தெரிவித்ததாவது,

எத்தனை வருடமாக கட்சியில் எனது தந்தை பணியாற்றி வருகிறார் இந்த தேர்தலில் போட்டியிட நிச்சயம் வெற்றி பெறுவோம் என்பதை பொறுக்கமுடியாமல் எங்களிடம் 10 லட்சம் டிமாண்ட் வைக்கிறார். என்ன தகவலை நாங்கள் வெளியிட்ட பிறகு நான் அப்படி கேட்கவே இல்லை என்று கதை சொல்கிறார் நாங்களும் திமுக தான் அவர்களும் திமுக தான். இதில் பிளவு ஏற்படும் விதமாக இப்படி லஞ்சம் கேட்பது ஏற்கத்தக்கதல்ல. என்னிடம் மட்டும்தான் இப்படி ஒரு விஷயத்தை செய்து இருக்கிறார் அதனால் தான் நாங்கள் மு க ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் எழுதி அனுப்பினோம்.தலைமையில் இது குறித்து பேசி இருக்கிறார்கள் வேட்பாளர் அறிவிக்கும் போது தான் தெரியும் என்று கூறினார்.Conclusion:
Last Updated : Dec 14, 2019, 6:44 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.