ETV Bharat / state

புதுக்கோட்டை கோ-ஆப்டெக்ஸ் ரூ.2.25 கோடி தீபாவளி விற்பனை இலக்கு!

author img

By

Published : Oct 19, 2021, 3:07 PM IST

புதுக்கோட்டை மாவட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் இந்த ஆண்டு தீபாவளி விற்பனை ரூ.2.25 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

தீபாவளி விற்பனை இலக்கு ரூ.2.25 கோடி
தீபாவளி விற்பனை இலக்கு ரூ.2.25 கோடி

புதுக்கோட்டை: புதிய பேருந்து நிலையத்தில் உள்ள முக்கனி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தொடங்கிவைத்தார்.

அப்போது பேசிய அவர், "சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சி புரம், ஆரணி, தஞ்சை போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப் புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள், திருபுவனம் பட்டு சேலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம்

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, லுங்கி, துண்டு ரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச் சீலைகள், நைட்டீஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி ரகங்களும் விற்பனைக்கு உள்ளன.

இந்நிலையத்தில் கடந்த தீபாவளிக்கு ரூ.92.70 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. நிகழ் ஆண்டு தீபாவளிக்கு ரூ.2.25 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கனவு நனவு திட்டம் எனும் சேமிப்பு திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது.

தீபாவளி விற்பனை இலக்கு ரூ.2.25 கோடி

எனவே, பொதுமக்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: நெம்மேலி கடல்நீரை சுத்திகரிக்கும் ஆலையில் ஸ்டாலின் ஆய்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.