ETV Bharat / state

மாவட்ட ஆட்சியரை அதிமுக மகளிரணிச் செயலர் எனக்கூறிய விவகாரம் - திமுக எம்.எல்.ஏ மீது வழக்குப் பதிவு - Pudukkottai Collector and DMK MLA S.Reghupathy

புதுக்கோட்டை: ஆட்சியர் உமா மகேஸ்வரி, அதிமுக மகளிரணிச் செயலாளர் போல் செயல்படுகிறார் என கூறிய திருமயம் சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ ரகுபதி மீது  காவல் துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Pudukkottai Collector and DMK MLA S.Reghupathy
author img

By

Published : Nov 20, 2019, 10:11 AM IST

புதுக்கோட்டையில் கடந்த 17ஆம் தேதி கூட்டுறவு வார விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் அதிமுக எம்.எல்.ஏக்கள் பெயரையும், அமைச்சர்கள் பெயரையும் அழைப்பிதழில் அச்சடித்து நிகழ்ச்சி நடைபெற்றது.

அதனைக் கண்டித்து முன்னாள் அமைச்சரும் திருமயம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ரகுபதி பேசும்போது, ''மாவட்ட நிர்வாகம் சரியாகச் செயல்படவில்லை. மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு அந்தந்த தொகுதி எம்.எல்.ஏக்கள் யாரையும் அழைக்காமல் அதிமுக எம்.எல்.ஏக்களை மட்டும் அழைத்து நிகழ்ச்சி நடைபெறுகிறது. தற்போது இருக்கும் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி அதிமுக மகளிரணிச் செயலாளராக செயல்பட்டு வருகிறார்'' என்றார்.

அவர் பேட்டியளித்த வீடியோ சமூக வலைதளங்களில் அவதூறாகவும், கேலியாகவும் பரப்பப்பட்டு வந்தது. நேற்று வழக்கறிஞர் ஷேக் திவான் என்பவர், இதனை எதிர்த்து கொடுத்தப் புகாரின் பேரில் திமுக எம்.எல்.ஏ ரகுபதிக்கு எதிராக காவல்துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிக்க: 'பிற்போக்காளர்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறப்போவதில்லை' - சாடிய பா. ரஞ்சித்!

Intro:Body:மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரியை, அதிமுக மகளிரணி செயலாளர் போல் செயல்படுகிறார் என கூறிய திருமயம் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ ரகுபதி மீது புதுக்கோட்டை நகர காவல் பிரிவு போலீசார் 4பிரிவின் கீழ் வழக்கு பதிவு.

புதுக்கோட்டையில் 17ம் தேதி கூட்டுறவு வார விழா நிகழ்ச்சி நடைபெற்றது அந்த நிகழ்ச்சியில் அதிமுக எம்எல்ஏக்கள் பெயரையும் அமைச்சர்கள் பெயரையும் அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு நிகழ்ச்சி நடைபெற இருந்தது அதனை கண்டித்து திமுக எம்எல்ஏக்கள் மாவட்ட அலுவலகத்தில் தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்கும் போது மாவட்ட நிர்வாகம் சரியாக செயல்படவில்லை மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு அந்தந்த தொகுதி எம் எல் ஏக்கள் யாரையும் அழைக்காமல் அதிமுக எம்எல்ஏக்கள் மட்டும் அழைத்து நிகழ்ச்சி நடைபெறுகிறது தற்போது இருக்கும் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி அதிமுக மகளிரணி செயலாளராக செயல்பட்டு வருகிறார் என முன்னாள் அமைச்சரும் திருமயம் தொகுதி திமுக எம்எல்ஏ ரகுபதி கூறியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அவதூராகவும், கேலியாகவும் பரப்பப்பட்டு வந்தது. இன்று வழக்கறிஞர் ஷேக் திவான் என்பவர் இதனை எதிர்த்து கொடுத்த புகாரின் பேரில் உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் வழக்கு 504 506(1) 294(பி) ஐ டி ஆக்ட் 67 ஆகிய பிரிவுகளின் கீழ் தி.மு.க. எம்.எல்.ஏ. ரகுபதியின் மீது வழக்கு பதிவு செய்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.