ETV Bharat / state

உருவ புறக்கணிப்புகளை ஊதித்தள்ளிய வருங்கால டாக்டரின் கதை - திருமயத்தை அடுத்த கீழாநிலைக்கோட்டை பகுதி

புதுக்கோட்டையினைச்சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி நவதாரணி அவர் மீதான உருவ புறக்கணிப்புகளைப் பொருட்படுத்தாமல் நீட் தேர்வில் தேர்ச்சிப்பெற்று மருத்துவ கல்லூரியில் பயில உள்ளார்.

Etv Bharatகேலி கிண்டலை பொருட்படுத்தாமல் மருத்துவராகப்போகும் மாற்றுத் திறனாளி மாணவி

author img

By

Published : Nov 3, 2022, 4:14 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை அடுத்த கீழாநிலைக்கோட்டை பகுதியைச்சேர்ந்தவர்கள் தனபால் - அமுதா தம்பதியினர். இவர்களுக்கு நவதாரணி என்ற மகளும், அஜிதரன் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் இருவரும் பிறப்பிலேயே மாற்றுத்திறனாளிகளாகப் பிறந்துள்ளனர். காலப்போக்கில் வளர்ச்சியில்லாமல் இருவரும் இருந்து வந்த நிலையில் பலரின் இழிசொல்லுக்கு ஆளாகியும் உள்ளனர்.

பல்வேறு புறக்கணிப்புகளுக்கு மத்தியிலும் சிறு வயதில் இருந்தே படிப்பில் கெட்டிக்காரியாகத் திகழ்ந்த, நவதாரணி, மருத்துவராக வேண்டும் என்ற கனவு கலையாமல் இருந்துள்ளார். ஓட்டுநராக வேலை பார்த்து வரும் தந்தை தனபாலின் கடின உழைப்பாலும், தாய் அமுதாவின் அரவணைப்பாலும் எந்த துன்பத்திற்கு ஆளாகாமல் வளர்ந்த நவதாரணி, தான் ஒரு மருத்துவர் ஆகவேண்டும் என்ற எண்ணத்தைக் கலைக்காமல், கனவில் மருத்துவராகவே வாழ்ந்து வந்துள்ளார்.

மருத்துவராக்கிய மகத்தான முயற்சி; இதற்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சி தான் நீட் தேர்வில் வெற்றி பெற்று, தற்போது மதுரை மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க அவருக்கு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது. சென்னையில் நடைபெற்ற மருத்துவ கலந்தாய்வில் நவதாரணி எம்பிபிஎஸ் படிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நம்மிடையே பேசிய நவதாரணி, 'முதல் நீட் தேர்விலேயே வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மாற்றுத்திறனாளி பிரிவில் எம்பிபிஎஸ் படிக்க தனக்கு வாய்ப்பு வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தன்னுடைய உயரத்தைப் பார்த்து பலரும் எள்ளி நகையாடினர். அதை நான் எப்போதும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. தனக்கு உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கிறது. படித்தால் வெற்றி பெறுவோம் என்று கடினமாக உழைத்ததால் வெற்றி பெற்றிருக்கிறேன்’எனக் கூறினார்.

உருவ புறக்கணிப்புகளை ஊதித்தள்ளிய வருங்கால டாக்டரின் கதை

அதைத்தொடர்ந்து நம்மிடையே பேசிய நவதாரணியின் தாய் அமுதா, 'தன் பிள்ளைகளை நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்ற கனவு தற்போது நிறைவேறியுள்ளது. தனது மகனும் நல்ல நிலைக்கு வர வேண்டும்' எனத் தெரிவித்தார். மேலும் தாங்கள் மிகுந்த சிரம நிலையில் இருந்து உயர்ந்து வருவதாகவும், தங்களைப் போன்று சிரமப்படுபவர்களுக்கு எனது பிள்ளைகள் உதவுவார்கள் எனவும் அமுதா தெரிவித்தார்.

இதையும் படிங்க:'சாதிக்க எதுவும் தடையில்லை...!' - மருத்துவ மாணவி நவதாரணி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.