ETV Bharat / state

"ஆதாயம் முக்கியமில்லை.. பிள்ளைங்களோட அன்பு மட்டும் போதும்..." 2 ரூபாய்க்கு இட்லி விற்கும் தனம் பாட்டி! - idly paati in tamil

2 rupees idly pati: விலைவாசி உயர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் புதுக்கோட்டையில் இரண்டு ரூபாய்கு இட்லியை விற்று பசியைப் போக்கும் 84 வயது தனம் பாட்டியை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

2 ரூபாய்க்கு இட்லி விற்கும் தனம் பாட்டி
2 ரூபாய்க்கு இட்லி விற்கும் தனம் பாட்டி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2023, 5:01 PM IST

“ஆதாயம் முக்கியமில்லை.. பிள்ளைங்களோட அன்பு மட்டும் போதும்”...2 ரூபாய்க்கு இட்லி விற்கும் தனம் பாட்டி!

புதுக்கோட்டை: காந்தி நகரில் உள்ள சிறிய குடிசை வீட்டில் வசித்து வருகிறார் 84 வயதாகும் தனம் பாட்டி. குடிசைக்குள் செல்ல வேண்டும் என்றால் 2 அடி குனிந்து தான் செல்லும் முடியும். சிறிய குடிசைக்குள்ளே விறகு அடுப்பில் சுடச்சுட இட்லியை தயார் செய்யும் தனம் பாட்டியின் இட்லிக்கு பெரிய அளவில் ரசிகர் கூட்டமே உள்ளது.

நாற்காலி, மேசை எதுவும் இல்லாமல் திண்ணையில், பாட்டியின் அருகே அமர்ந்து பலர் தனம் பாட்டியின் இட்லியை சுவைத்து வருகின்றனர். ஒரு இட்லி ரூ.10க்கு விற்கும் இன்றைய காலகட்டத்தில், ஒரு இட்லி ரூ.2க்கு விற்பனை செய்து கொண்டிருக்கிறார் தனம் பாட்டி. 10 ரூபாயிலேயே பலரது வயிற்று பசியை ஆற்றி வருகிறார். மாவு அரைப்பது, சட்னி, சாம்பார், சுண்டல் வைப்பது, இட்லி அவிப்பது வரையிலும் தனி ஆளாக பாட்டி செய்து வருகிறார்.

84 வயதிலும் சுறுசுறுப்புடன் பம்பரமாகச் வேலை செய்யும் பாட்டியிடம் பேசுகையில், “ நான் பொறந்து, வளர்ந்தது எல்லாம் அறந்தாங்கி பக்கத்துல இருக்க சிதம்பரவிடுதிங்கிற சின்ன கிராமம். வீட்டுக்காரர் சண்முகத்துக்கு ஊரு பட்டுக்கோட்டை. அவரு புதுக்கோட்டையில சின்னதா ஒரு டீக்கடை வச்சிருந்தாரு. 1960-ல எங்களுக்குக் கல்யாணம் நடந்துச்சு. கல்யாணம் முடிச்ச கையோட புதுக்கோட்டைக்கு கூட்டிக்கிட்டு வந்திட்டாரு.

ஒரு இட்லி 10 காசு: டீக்கடையை வைத்து பிழைப்பு ஓட்டிக்கிட்டு இருந்தோம். ஆனால் சமாளிக்க முடியவில்லை. சில வருடங்கள் கழித்து இட்லிக்கடை ஆரம்பிச்சோம். கடை ஆரம்பிச்ச காலத்துல இட்லி ரூ.10 காசு. மத்த கடைகளை விட எப்பவும் நம்ம கடையில விலை கொஞ்சம் குறைவாத்தான் இருக்கும்.

நாம போதும்னு சொல்ற ஒரே விஷயம் சாப்பாடு மட்டும் தான். எவ்ளோ நல்ல சாப்பாடா இருந்தாலும், யாரா இருந்தாலும், வயிறு நிறைஞ்சதுக்கு அப்புறம் சாப்பிட முடியாது. பணத்தை விட, நம்மள தேடி வர்றவங்களோட பசியை போக்குறது தான் முக்கியம்னு நினைச்சோம். அதனாலயே என்னவோ எங்களைத் தேடி நிறைய பிள்ளைங்க வருவாங்க. பலர் உங்களுக்கு எப்படி கட்டுப்பிடியாகுது கேட்பாங்க. குறைஞ்ச லாபம் கிடைச்சா போதும்னு நினைக்கிறதால தான் சமாளிக்க முடிஞ்சது.

அன்பு மட்டும் போதும்: எனக்கு ஆதாயம் முக்கியமில்ல, பிள்ளைங்களோட அன்பு மட்டும் போதும். டீ, இட்லி வியாபாரம் செஞ்சு தான் பிள்ளைங்க மூணு பேரையும் வளர்த்தோம். மூணு பேரும் கல்யாணம் முடிஞ்சு நல்லாயிருக்காங்க. கொஞ்ச வருஷத்துக்கு முன்னால, வீட்டுக்காரருக்கு கண்ணு ஆபரேசன் செஞ்சோம். அப்புறம் அவருக்கு கிட்னியில பிரச்னை வந்ததால டீக்கடையை நிறுத்திட்டோம்.

இட்லி கடையை மட்டும் நிறுத்தவே இல்லை. காலையில 5 மணிக்கெல்லாம் வேலைய ஆரம்பிச்சிடுவேன். ஸ்கூல் பிள்ளைங்க, ஆபிஸ்ல வேலை பார்க்கிறவங்க, கூலிக்கு வேலை பார்க்கிறவங்கன்னு தினசரி வாடிக்கையாளர்கள் பலர் வருவாங்க. அதிகபட்சமா ஒருநாளைக்கு 200 ரூபாய் கிடைக்கும். ஒரு சில நாள் வியாபாரம் பெருசா இருக்காது.

அடுத்த நாள் உளுந்து, அரிசி வாங்கிறதுக்குக் கொஞ்சம் சிரமமா இருக்கும். ஆனாலும், சமாளிச்சிடுவேன். விறகு அடுப்புக்கு, சாயந்தர நேரத்துல காடு, கரைக்கு போய் விறகு எடுத்துக்கிட்டு வந்துடுவேன். மாவுக்கல்லு இருக்கு. இப்போ பையன் கிரைண்டரும் வாங்கிக் கொடுத்திருக்கான். பெரும்பாலும், மாவுக் கல்லுலயே மாவு ஆட்டிக்கிடுவேன்.

நாலு பேருக்கு தினமும் இட்லி கொடுத்துப் பழகிட்டேன். அவங்களும் சாப்பிட்டுப் பழகிட்டாங்க. நான் சாப்பிடுற பிள்ளைங்ககிட்ட கணக்கு கேட்கிறதேயில்லை. வேணுங்கிற இட்லியை எடுத்து வச்சிக்குவாங்க. சாப்பிட்டுட்டு சரியா கணக்குப் போட்டு கொடுத்துட்டு போயிடுவாங்க. ரொம்ப வருஷமா ஒரு ரூபாய்க்குத்தான் இட்லி கொடுத்துக்கிட்டு இருந்தேன்.

இரண்டு ரூபாய் இட்லி: விலைவாசி உயர்ந்துகிட்டே இருந்தாலும் நான் மட்டும் விலையை ஏத்தாம தான் இருந்தேன். இப்ப இரண்டு வருஷமாதான் ரெண்டு ரூபாய்க்குக் கொடுக்குறேன். அதுகூட, தினமும் இங்க சாப்பிட வர்ற பிள்ளைங்கதான், உன் உழைப்புக்காகவது இன்னும் ஒரு ரூபாய் சேர்த்துக் கொடுக்கணும்னு சொல்லி, அவங்களா விலையை ஏத்தி கொடுத்துட்டுப் போக ஆரம்பிச்சாங்க. அது அப்படியே மாறிருச்சு.

சாப்பிட வருகிற பிள்ளைங்க பலர், “உன் குடிசையை எடுத்துக் கட்டித் தர்றேனு” சொல்லுவாங்க. அதெல்லாம் வேண்டாம் , இந்த கிழவிக்கு இதுவே போதும்னு சொல்லிடுவேன். முடியாம இருந்த கணவரை இட்லி வேலை செஞ்சு தான் பார்த்துக்கிட்டேன். இரண்டு வருஷத்துக்கு முன்னாடி, அவரு என்னை மட்டும் தனியா விட்டுட்டுப் போயிட்டாரு. இப்ப கூட என் பிள்ளைங்க, எங்களோட வந்து ஓய்வு எடுங்கம்மான்னு சொல்லிக் கூப்பிடுறாங்க. ஆனா, இட்லி கடையையும், கடைக்கு வர்ற இந்த பிள்ளைகளையும் விட்டுப்போக மனசு இல்லை. இந்த கிழவியோட உயிரும் இட்லி கடையிலயே போகட்டும்னு சொல்லி அவங்களை அனுப்பிடுவேன்" என்கிறார் தனம் பாட்டி.

தமிழக அரசுக்கு கோரிக்கை: இரண்டு ரூபாய்க்கு இட்லி என்றாலும் தனம் பாட்டியின் அன்பான உபசரிப்பும், அக்கறையான பேச்சுக்களும் தனது குடிசைக்கு வரும் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்து இழுக்கிறது. விலைவாசி கடுமையாக உயர்ந்திருக்கும் நேரத்திலும் இரண்டு ரூபாய்க்கு இட்லி விற்பது என்பது ஆச்சரியமாக இருப்பதாகவும், பத்து ரூபாயை தாண்டி ஒரு இட்லி விற்பனை செய்யப்படும் இந்த காலத்தில் இரண்டு ரூபாய்க்கு இட்லி வழங்கி வரும் மூதாட்டிக்கு வாடிக்கையாளர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

கிடைப்பது குறைந்த வருவாய் என்றாலும் மாணவர்கள், பணிக்கு செல்வோர் தினமும் வந்து வயிறார சாப்பிட்டு செல்வது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தனம் பாட்டி கூறுகிறார். மேலும் தான் வாழும் குடிசை, மழைக்காலங்களில் வசிக்க முடியாத இடமாக உள்ளதாகவும் தனக்கு ஒரு வீடு கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளார்.

தள்ளாடும் வயதிலும், மற்றவரை சார்ந்து இல்லாமல், கை கால்கள் தடுமாறினாலும் தான் கொண்ட எண்ணம் தவறாமல், அன்பை பரிமாறி தினமும் உழைத்து தன் பிழைப்பை நடத்தி வரும் தனம் பாட்டியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: "நம்பிக்கையின்மையை அகற்ற மனிதநேய அணுகுமுறையை கடைப்பிடிப்போம்"- ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி முன்னுரை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.