தமிழ்நாட்டில், திருவள்ளுவர், திருப்பூர், கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில், சுதந்திர தின நாளில் தலித், மற்றும் அருந்ததிய ஊராட்சி மன்ற தலைவர்களை ஜனநாயக கடமையை செய்யவிடாது தடுத்திட்ட ஆதிக்க சாதி வர்க்கத்தினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒன்றிய செயலாளர் ஏ.கணேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் தென்றல் கருப்பையா, நகர செயலாளர் தங்கராஜ், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் கர்ணா, வாலிபர் சங்க நிர்வாகிகள், கோபால், ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.