இரு தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டை வந்த முதலமைச்சர் பழனிசாமி கரோனா மற்றும் வளர்ச்சித்திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்.
அப்போது பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். விவசாயிகள் நலனை பாதுகாக்கும் வகையில் காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ரூ.700 கோடி நிதி தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக காவிரி டெல்டா மாவட்டங்களில் அறிவித்ததற்கு நினைவு பரிசாக மாட்டு வண்டி மற்றும் இரண்டு காளைகளை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார். தமிழர்களின் பாரம்பரியத்தை போற்றும்படி இந்த நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
மாட்டுவண்டி மற்றும் காளை மாடுகள் முதலமைச்சர் பழனிசாமியின் சொந்த ஊரான சிலுவம்பாளையத்திற்கு வழி அனுப்பி வைக்கப்பட்டது. அமைச்சர் விஜயபாஸ்கர் 5 கிலோ மீட்டர் தூரம் மாட்டு வண்டியில் காளைகளைப் அவரே ஓட்டிச் சென்றார்.
இதற்கிடையில், மாட்டு வண்டியை அறங்காவல் குழுவை சேர்ந்த பழனிவேல் தான் வழங்கியதாக கூறப்படுகிறது.
ஆனால், இதனை அமைச்சர் தான் முதலமைச்சருக்கு வழங்கியதாக அமைச்சர் தரப்பில் கூறப்படுவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மனுதர்ம நூலை விமர்சித்த எம்பி திருமாவளவன் : மாவட்ட வாரியாக பாஜகவினர் புகார்