புதுக்கோட்டை மாவட்டம் வைரிவயல் கிராமத்தில் மாபெரும் குதிரை வண்டி, மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
இதில் கரிச்சான் மாடு, பூஞ்சிட்டு மாடு, நடுமாடு, அதேபோல் கரிச்சான் குதிரை, பூஞ்சிட்டு குதிரை என ஏழு பிரிவுகளாக மாடுகள், குதிரைகள் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன.
இந்தப் போட்டிக்கு சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாடு, குதிரை ஓட்டும் சாரதிகள் கலந்துகொண்டனர். வெற்றிபெற்ற மாடு, குதிரைகளின் சாரதிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரிய வழக்கு: உரிய உத்தரவு பிறப்பிக்க ஆட்சியருக்கு உத்தரவு