ETV Bharat / state

மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே சென்று கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணி - புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே சென்று கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணியினை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு நேரில் ஆய்வுசெய்தார்.

மாற்றுத்திறனாளிகளின்  இல்லங்களுக்கே  சென்று கோவிட்  தடுப்பூசி  வழங்கும் பணி

author img

By

Published : Jun 23, 2021, 6:51 AM IST

புதுக்கோட்டை: மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே சென்று கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணியினை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

பின்னர் ஆட்சியர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு, மாவட்டத்தில் கோவிட் தொற்று பெருமளவில் குறைந்துள்ளது. மாவட்டங்களில் அதிகளவில் மருத்துவ முகாம்கள், தடுப்பூசி முகாம்கள், பொதுமக்களின் இல்லங்களுக்கே சென்று காய்ச்சல் பரிசோதனை போன்றவை நடத்தப்பட்டுவருகின்றன.

தமிழ்நாடு முதலமைச்சர் தடுப்பூசி முகாம்களுக்கு வர இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்களின் இல்லங்களுக்கே சென்று தடுப்பூசிகள் வழங்கிட அறிவுறுத்தியுள்ளார்கள். அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பு மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே சென்று தடுப்பூசி வழங்கும் பணி நடைபெறும் இடங்களை பார்வையிட்டு ஆய்வுசெய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் (ஜூன் 21) 1,500 மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று 2,000 மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசு வழங்கக்கூடிய தடுப்பூசி எண்ணிக்கைகளின் அடிப்படையிலும், தினசரி தேவைக்கேற்பவும் மாவட்டம் முழுவதும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுவருகின்றன. தற்பொழுது பொதுமக்களிடையே தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு அதிகளவில் உள்ளது.

மேலும் பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்த வருகைதருவதால் அதிகக் கூட்டம் கூடாமல் தடுப்பூசி வழங்கிடும் வகையில் மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.