புதுக்கோட்டை: திருக்கோகர்ணம் பகுதியைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன். இவரது மகள் சுனைனா பானு. இவர் அதே பகுதியைச் சேர்ந்த பீர்முகமது என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இதன் காரணமாகப் பெண்ணின் கல்லூரி படிப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு) ஆகியவற்றைத் தர முடியாது என்று அவரது பெற்றோர் எனக் கூறியுள்ளனர்.
இது குறித்து காதல் தம்பதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதேபோல், பெண்ணின் பெற்றோரும் தங்களது மகளை பீர்முகமது மிரட்டித் திருமணம் செய்துகொண்டதாக அதே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் புகாரின் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று காவல் நிலையம் முன்பு காதல் தம்பதியினர் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த பெண்ணின் பெற்றோரும் காவல் நிலையம் வந்து தனது மகளுக்கு அருகே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் அவர்களைச் சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தைக்காக அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: காதலை மறுத்த பெண்' கல்லூரியில் வளாகத்தில் கொடூரக்கொலை