ETV Bharat / state

'கொரோனா' முன்னெச்சரிக்கை நடவடிக்கைள்: புதுக்கோட்டை ஆட்சியர் ஆலோசனை - புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 174 பேர்

புதுக்கோட்டை: மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தலைமையில், கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கொரனா வைரஸ் குறித்து ஆட்சியர் உமா மகேஸ்வரி பேட்டி

author img

By

Published : Mar 7, 2020, 9:56 AM IST

புதுக்கோட்டையில், கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி செய்தியாளர்களிடம் கூறுகையில், "கொரோனா வைரஸை தடுக்க புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகின்றன. இதுவரை சீனாவிலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 174 பேர் வந்துள்ளனர்.

கொரனா வைரஸ் குறித்து ஆட்சியர் உமா மகேஸ்வரி பேட்டி

இதில் 118 பேரின் 28 நாள் கண்காணிப்புக் காலம் முடிவடைந்துள்ளது. எஞ்சிய நபர்களும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருகின்றனர். மேலும், பள்ளிக் கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து, போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த, அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அறந்தாங்கி அரசு மருத்துவமனையில், வைரஸ் பாதிப்பிற்கென தனி வார்டுகள் தொடங்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் குறித்து, வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தவறான வதந்தி பரப்புபவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தொடர்ந்து, அரசு அறிவுறுத்தலின்படி அனைத்துத் துறை சார்ந்த குழு அமைக்கவும், கிராமப்புறங்களில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஆலோசிக்கப்பட்டுவருகிறது. மேலும், மாஸ்க், கையுறை உள்ளிட்டவை அரசு மருத்துவமனையில் போதிய அளவில் இருப்பில் உள்ளது" என்றார்.

இதையும் படிங்க: திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் காலமானார்! தகவல்கள் நேரலையில்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.