புதுக்கோட்டை: கந்தர்வகோட்டை அடுத்த கல்லுக்காரன்பட்டியைச் சேர்ந்த மாணவி லோக பிரியா, நியூசிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் பளு தூக்கும் விளையாட்டில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனைப் படைத்தார்.
காமன்வெல்த் போட்டி நடந்து கொண்டு இருந்தபோது லோக பிரியாவின் தந்தை திடீரென உயிரிழந்தார். தந்தையின் இறுதிச்சடங்கில் லோக பிரியாவால் கலந்து கொள்ள முடியவில்லை.
தாயகம் திரும்பிய நிலையில் தன் தந்தையின் நினைவிடத்தில் லோக பிரியா அஞ்சலி செலுத்தினார். தன் தந்தையின் கல்லறையைப் பிடித்து கண்ணீர் விட்டு லோக பிரியா கதறி அழுதது காண்போரின் இதயத்தை கனக்கச் செய்தது. தொடர்ந்து பதக்கம் வென்று தாயகம் திரும்பிய லோக பிரியாவுக்கு பொது மக்கள் வரவேற்பு அளித்தனர்.
இதையும் படிங்க: 20ஆண்டுகளாக கிடைக்காத பாசன வசதி - அரசுக்கு தஞ்சை விவசாயிகள் வைத்த கோரிக்கை