ETV Bharat / state

கரோனா விழிப்புணர்வு: மாணவர்களின் கவிதைகள், ஓவியங்களுக்கு பரிசு! - மாவட்ட ஆட்சியர் தகவல் - collector calling school students to show up their corona awareness abilities

புதுக்கோட்டை: பள்ளி, கல்லூரி மாணவர்கள் வீட்டில் இருக்கும் இத்தகையச் சூழலில் கரோனா நோய்த் தொற்று விழிப்புணர்வு குறித்த தங்களின் கவிதை, ஓவியங்களை வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைத்தால் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

collector calling school students to show up their corona awareness abilities

author img

By

Published : Mar 22, 2020, 8:35 PM IST

பள்ளி, கல்லூரி மாணவர்கள் வீட்டில் இருக்கும் இத்தகைய தருணத்தில் கரோனா தொற்று விழிப்புணர்வு குறித்து தங்களின் கவிதை, ஓவியங்களை வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைத்தால் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படவுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி, தெரிவித்ததாவது:

தமிழ்நாட்டில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைப்படி மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறையின்போது சுற்றுலா செல்வதையோ, தேவையற்ற பயணங்களை மேற்கொள்வதையோ தவிர்த்திடவும், குழந்தைகள் அதிகம் ஒன்றிணைந்து விளையாடுவதையும் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வேளையில் தங்கள் வீடுகளில் இருந்தபடியே ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் மாணவர்கள் தங்கள் நேரங்களைச் செலவிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது. அந்த வகையில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் கரோனா விழிப்புணர்வு குறித்து கவிதை, ஓவியங்களை வரைந்து கீழ்க்கண்ட வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பலாம். தேர்வு செய்யப்படும் சிறந்த கவிதை, ஓவியங்களுக்கு மாவட்ட நிர்வாகத்தால் பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தங்களது படைப்புகளை 98651 20738 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கும், 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் 94434 88869 என்ற எண்ணிற்கும், 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் 73737 97250 என்ற எண்ணிற்கும், அதேபோன்று கல்லூரி மாணவர்கள் 97863 82393 என்ற எண்ணிற்கும் இன்றிலிருந்து, மார்ச் 31ஆம் தேதி வரை அனுப்பி வைக்கலாம்.

கரோனா பரவிவரும் இத்தகையச் சூழ்நிலையில் நோய்த் தொற்று குறித்த விழிப்புணர்வுகளை விளையாட்டாக எடுத்துக்கொள்ளாமல் அரசால் தெரிவிக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தவறாது பின்பற்றி அனைவரும் கவனமுடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டியது மிக முக்கியமான ஒன்றாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.