ETV Bharat / state

வேங்கை வயல் விவகாரம்; உண்மை கண்டறியும் பரிசோதனைக்கு சிபிசிஐடி கோரிக்கை.. வழக்கின் முழு விபரம்! - புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம்

Vengaivayal Issue: வேங்கைவயல் விவகாரத்தில் 30 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தற்போது 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள அனுமதி கோரி சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

CBCID seeking permission for fact finding probe in Vengaivayal issue court adjourned the case to December
வேங்கை வயல் விவகாரம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 28, 2023, 6:54 PM IST

புதுக்கோட்டை: முத்துக்காடு ஊராட்சிக்குட்பட்ட வேங்கைவயலில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பட்டியல் இன மக்கள் பயன்படுத்தக்கூடிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

இச்சம்பவம் நடைபெற்று 11 மாதங்கள் ஆன நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணையில் இதுவரை குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை. இந்நிலையில் தான் குற்றவாளிகளை கண்டறிய சிபிசிஐடி போலீசார் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள முடிவெடுத்து நீதிமன்றத்தை நாடிய நிலையில், புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் முதற்கட்டமாக 11 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள ரத்த மாதிரிகள் எடுக்க அனுமதி கொடுத்தது.

இதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி 11 பேரை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருமாறு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இதில் அன்று 3 பேர் ஆஜரான நிலையில் வேங்கைவயலை சேர்ந்த பட்டியலின மக்கள் 8 பேர் ஆஜராகவில்லை.

பின்னர் அந்த 8 பேரும் ரத்த மாதிரிகள் கொடுக்காமல் இருந்த நிலையில் பின்னர் சிபிசிஐடி போலீசார் மேலும் 10 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, அந்த 10 பேருக்கும் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள ரத்த மாதிரியும், அதேபோல் இருவருக்கு குரல் மாதிரி பரிசோதனையும் செய்து சென்னையில் உள்ள அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனையடுத்து டிஎன்ஏ பரிசோதனைக்கு ரத்த மாதிரி கொடுக்க மறுப்பு தெரிவித்த வேங்கைவயலைச் சேர்ந்த 8 பேரில் ஒருவரான முத்துகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையை நாடி பாதிக்கப்பட்ட மக்களையே போலீசார் பரிசோதனைக்குட்படுத்த முயல்வதாக வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கின் அடிப்படையில் டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ள மறுப்பு தெரிவித்த 8 பேரும் வழக்கு விசாரணை நடைபெறும் புதுக்கோட்டை வன்கொடுமை நீதிமன்றத்தையே நாடி தீர்வு காணலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி இளங்கோவன் உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட 8 பேரும் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஆஜரானவர்களிடம் சிபிசிஐடி போலீசார் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்வதற்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு நகலை சம்பந்தப்பட்ட 8 நபர்களிடமும் நீதிபதி ஜெயந்தி வழங்கி, அதனைப் படித்துப் பார்த்து அதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி, தங்களது விளக்கத்தை தெரிவிக்கலாம் என்று கூறி அந்த 8 பேரையும் அனுப்பி வைத்தார்.

அதன்பின் சம்பந்தப்பட்ட 8 பேரும் மீண்டும் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர். மேலும், இவர்களுடன் இந்த வழக்கை விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டியும் ஆஜரான நிலையில், டிஎஸ்பி பால்பாண்டியிடம் நீதிபதி இந்த வழக்கில் டிஎன்ஏ பரிசோதனை எதனால் செய்யப்படுகிறது என்று கேட்ட நிலையில், டிஎஸ்பி பால்பாண்டியன் இந்த வழக்கை பொறுத்தவரை அறிவியல் பூர்வமாக அணுக வேண்டிய நிலை உள்ளதால் அந்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பிட்ட 8 பேருக்கு மட்டும் டிஎன்ஏ பரிசோதனை எடுக்க அனுமதி கேட்கவில்லை என்றும், அந்தப் பகுதி கிராமங்களைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். அதன் பின்னர் சம்பந்தப்பட்ட 8 பேரிடம் தனித்தனியாக எதற்காக டிஎன்ஏ பரிசோதனை எடுக்க மறுப்பு தெரிவிக்கிறீர்கள் என்று நீதிபதி ஜெயந்தி கேள்வி எழுப்பினார்.

அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களையே விசாரணைக்குட்படுத்தி டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்வதாகவும் அதனால் டிஎன்ஏ பரிசோதனைக்கு மறுப்பு தெரிவிப்பதாக 8 பேரும் தனித்தனியாக ஒரே பதிலை தெரிவித்தனர். இதனை ஏற்ற நீதிபதி இந்த வழக்கில் கடந்த ஜூலை 4ஆம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக கூறியிருந்தார்.

அதன் அடிப்படையில் வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த 8 பேரும் கடந்த ஜூலை 4ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதேபோல் சிபிசிஐடி காவல்துறை தரப்பில் ஆய்வாளர் புவனேஸ்வரி ஆஜரானார். இதன்பின் இந்த வழக்கு குறித்து எடுக்கப்பட்ட முடிவு அடிப்படையில் டிஎன்ஏ மாதிரி பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்த வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த 8 பேரும் டிஎன்ஏ பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இதற்காக மறுநாள் ஜூலை 5ம் தேதி, 8 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று ரத்த மாதிரி கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

இதனையடுத்து கடந்த ஜூலை 5ஆம் தேதி வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த 8 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டிஎன்ஏ பரிசோதனைக்கான ரத்த மாதிரி எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி போலீசார் நான்கு சிறார்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய அனுமதி கேட்டு புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர்.

இதனால் இறையூர், வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த நான்கு சிறுவர்களின் பெற்றோர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் 16 வயதுடைய சிறுவன் தரப்பில் ஆஜரான வக்கீல் டிஎன்ஏ பரிசோதனைக்கு ஆட்சேபனை தெரிவித்து நீதிபதியிடம் கூறினார். மேலும் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு சிபிசிஐடி காவல்துறை சம்மன் வழங்கியது எப்படி எனவும் கேள்வி எழுப்பினர்.

இறையூரை சேர்ந்த மூன்று சிறுவர்களின் பெற்றோரும் ஆஜராகி இருந்தனர். மேலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள ஆட்சேபனை தெரிவித்ததை தொடர்ந்து, இந்த வழக்கை, கடந்த ஜூலை 14ஆம் தேதிக்கு புதுக்கோட்டை வன்கொடுமை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி ஒத்திவைத்தார்.

அதைத் தொடர்ந்து கடந்த ஜூலை 14ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் சம்பந்தப்பட்ட நான்கு சிறுவர்களும் பெற்றோர்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராயினர். நான்கு சிறுவர்களுக்கும் டிஎன்ஏ பரிசோதனை செய்ய சிபிசிஐடி போலீசார் அனுமதி கேட்டு இருந்த நிலையில், நான்கு சிறுவர்களின் பெற்றோர்களும் டிஎன்ஏ பரிசோதனைக்கு சம்மதம் தெரிவித்துள்ளதால், சிபிசிஐடி போலீசாரின் அனுமதி கேட்டு உள்ள மனுவின் மீது கடந்த ஜூலை 17ஆம் தேதி உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி ஜெயந்தி கூறி ஒத்தி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் ஜூலை 17ஆம் தேதி ஒரு சிறுவன் உட்பட 6 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அவர்களிடம் வாக்குமூலம் பெற்றதன் அடிப்படையில் ரத்த மாதிரி சேகரிக்க இறையூர் பகுதியைச் சேர்ந்த 4 பேர், வேங்கை வயல் பகுதியைச் சேர்ந்த இருவர் என 6 பேருக்கு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த மாதிரி சேகரிக்க சிபிசிஐடி காவல்துறைக்கு அனுமதி வழங்கினர்.

ஒரு சிறுவன் உட்பட 6 பேருக்கு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. இந்த வழக்கில் இதுவரை நான்கு சிறுவர்கள் உட்பட 30 பேருக்கு ஏற்கனவே டிஎன்ஏ மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது புதிதாக 10 பேருக்கு உண்மை கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ள சிபிசிஐடி காவல்துறையினர் தரப்பில் மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 25ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு இன்று (நவ.28) விசாரணைக்கு வந்தது. விசாரணைக்காக சிபிசிஐடி காவல்துறையினர் மட்டுமல்லாது காவல்துறையினரால் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்படும் நபர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு அவர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

வழக்கை விசாரணை செய்த நீதிபதி மஞ்சுளா வழக்கை வரும் டிசம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, அன்றைய தினம் சிபிசிஐடி தரப்பில் புதிதாக மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார். அதில் சிபிசிஐடி காவல்துறை என்ன செய்யப் போகிறது, எந்த மாதிரி பரிசோதனை செய்யப் போகிறோம் என்பது குறித்து அதில் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதேபோன்று புதுக்கோட்டை ஆயுதப்படை பயிற்சி காவலர் முரளி ராஜா டிஎன்ஏ பரிசோதனை மட்டுமல்லாது குரல் மாதிரி பரிசோதனைக்கும் அவர் உட்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரூ.4,500 கோடி மணல் கொள்ளை வழக்கில் உயர் நீதிமன்றத்தில் நடந்த காரசார வாதம் - முழு விவரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.