ETV Bharat / state

ரூ.700 கோடி செலவில் காவிரி - வைகை குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு தை மாதம் அடிக்கல்! - Health minister

புதுக்கோட்டை: விவசாயிகளின் கனவுத்திட்டமான காவிரி-வைகை குண்டாறு இணைப்பு திட்டத்தை முதலமைச்சர் தை மாதம் தொடங்கிவைக்க உள்ளதாக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Cauvery-Vaigai Gundar Link project
Cauvery-Vaigai Gundar Link project
author img

By

Published : Oct 19, 2020, 6:30 AM IST

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடத்திற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி மற்றும் கந்தர்வக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் பா.ஆறுமுகம் முன்னிலையில் நடைபெற்றது.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், 'தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், கீரனூர் அரசுப் பள்ளியில் ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் ரூ.1.70 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

கரோனா பாதித்த நோயாளிகளுக்குத் தனியார் மருத்துவமனைகளை விட மிகச் சிறந்த முறையில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டையிலிருந்து மருத்துவச் சிகிச்சைக்கு மக்கள் பிற மாவட்டங்களுக்குச் சென்ற நிலை மாறி, பிற மாவட்டங்களிலிருந்து மருத்துவச் சிகிச்சைக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பொதுமக்கள் வரும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது' என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், 'புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் பல ஆண்டுக் கால கனவுத்திட்டம் காவிரி-வைகை குண்டாறு இணைப்பு திட்டம் ஆகும். இத்திட்டத்தை நிறைவேற்றத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதுடன், முதற்கட்ட பணிகளுக்காக ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வருகின்ற தை மாதம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இத்திட்டத்தைத் தொடங்கி வைக்கவுள்ளார். இத்திட்டம் நிறைவேற்றப்படும் பொழுது விவசாயம் செழித்து நிலத்தடி நீர் மட்டம் உயருவதுடன் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் மேம்பாடு அடையும். பல தலைமுறைகள் பயன்பெறும் மகத்தான திட்டம் காவிரி-வைகை குண்டாறு இணைப்பு திட்டம்' இவ்வாறு அவர் பேசினார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் வேரூன்ற முயற்சிக்கும் இந்துத்துவா சித்தாந்தம் - பேராசிரியர் திருநாவுக்கரசர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.