ETV Bharat / state

'காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்' - புதுக்கோட்டை  ஆட்சியர்

புதுக்கோட்டை : காவிரி - குண்டாறு இணைப்புப் பணிகளுக்கான திட்டக்கூட்டம் அம்மாவட்ட ஆட்சியரின் தலைமையின் கீழ் இன்று நடைபெற்றது.

author img

By

Published : May 22, 2020, 5:49 PM IST

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஷ்வரி

புதுக்கோட்டையில் நான்கு மாதங்களில் காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கான பணிகள் தொடங்கும் என அம்மாவட்ட ஆட்சியர் உமா மகேஷ்வரி அறிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டப் பணிகள் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளதாகவும், இதற்காக மூன்று வட்டாச்சியர்கள் கொண்ட குழு, 656 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்தும் பணியை மேற்கொள்ள உள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்தப் பணிகளுக்கான திட்டக் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், விராலிமலை, குளத்தூர், புதுக்கோட்டை ஆகிய வட்டங்களில் முதல்கட்டப் பணிகள் தொடங்க உள்ளதாகவும், நில அளவை சட்டத்தின்கீழ் கையகப்படுத்துதல் தொடர்பான அறிக்கைகளை அரசு வெளியிட்ட பிறகு இப்பணிகள் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிகபட்சமாக நான்கு மாதங்களுக்குள் முதல்கட்ட பணிகள் நடைபெறும் என்றும் பிற திட்டப்பணிகள் அனைத்தும் அரசாங்கம் தருகிற வழிமுறைகளின்படி தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க : புதுக்கோட்டையில் தனியார் வங்கியில் பணிபுரிந்த நகை மதிப்பீட்டாளருக்கு கரோனா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.