புதுக்கோட்டை மாவட்ட காவல் துறையினருக்கு வாகனத்தின் மூலம் கஞ்சா கடத்த இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பெயரில் துணை காவல் கண் காணிப்பாளர் செந்தில்குமார்
மேற்பார்வையில், தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் புதுக்கோட்டையிலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், தாவூத் மில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கார் ஓட்டி வந்தவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர், காரை சோதனையிட்டனர். அதில், 85 பண்டல் கொண்ட கஞ்சா பொட்டலம் இருந்துள்ளது.
மேலும், காரை ஓட்டி வந்தவர் பெயர் ஆரோக்கியதாஸ் என்பது தெரியவந்தது. இவர் மீது கோழிக்கோடு, கோயம்புத்தூர் ஆர்எஸ். புரம், புதுக்கோட்டை மதுவிலக்கு பிரிவு, காரைக்குடி வடக்கு, ஈரோடு, கோயம்புத்தூர் மதுவிலக்கு, திண்டுக்கல், கோதாவரி மாவட்டம் ஏலூர் ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு, அடிதடி, மது விற்பனை போன்ற வழக்குகள் உள்ளன.
இதனை அடுத்து தனிப்படையினர், ஆரோக்கியதாஸை கைது செய்து கடத்திக் கொண்டு வரப்பட்ட கஞ்சா பொட்டலங்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து திருக்கோகர்ணம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு ஆரோக்கியதாஸிடம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் எடை 180 கிலோ என்றும் மதிப்பு சுமார் 27 லட்ச ரூபாய் எனவும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புதுக்கோட்டையில் ரூ.27 லட்சம் மதிப்புடைய கஞ்சா பறிமுதல்!
புதுக்கோட்டை: காரில் கடத்தி வரப்பட்ட ரூபாய் 27 லட்சம் மதிப்புடைய கஞ்சா பொட்டலங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.