ETV Bharat / state

"உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்" - முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் - today latest news

C.Vijayabaskar: உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை என்பது நல்ல விஷயம் என்றாலும், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Vijayabaskar Spoken About Organ Donors
உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 28, 2023, 3:51 PM IST

உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை: அதிமுக பூத் கமிட்டி மற்றும் நிர்வாகிகள் கூட்டமானது புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு நிர்வாகிகளிடம் கலந்துரையாடி, பூத் கமிட்டி நிர்வாகிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து கூறினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சி.விஜயபாஸ்கர், "வருகிற நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல, எந்த தேர்தல் வந்தாலும் அதனைச் சந்திக்க அதிமுக தயாராக உள்ளது. உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை என்பது நல்ல விஷயம் என்றாலும், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சுகாதாரத்துறை, திமுக ஆட்சியில் செயல்படாமல் திறனற்ற துறையாக உள்ளது என்று நான் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தேன். ஆனால், அந்த நிலை இன்னும் மாறவில்லை. மக்களும், நோயாளிகளும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். எம்ஆர்பி செவிலியர்கள் தொடர்ந்து சென்னையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த செவிலியர்களுக்கு பணி கொடுக்க இந்த அரசுக்கு மனமில்லை.

இந்த இரண்டரை ஆண்டுகளில் மருத்துவர் உள்ளிட்ட எந்த வித மருத்துவப் பணி நியமனமும் நடைபெறவில்லை. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை மன மகிழ்ச்சியோடு வைத்துக் கொண்டால்தான், அவர்கள் பணியை நிறைவாகச் செய்ய முடியும். ஆனால், இன்றைய ஆட்சியில் மருத்துவர்கள் மட்டுமல்லாது, செவிலியர்கள் உள்பட அனைத்து மருத்துவப் பணியாளர்களும் மிகுந்த மன உளைச்சலுடன் பணியாற்றி வருகின்றனர்.

உயிர் காக்கும் துறையாக சுகாதாரத்துறை உள்ளது என விளக்கம் அளித்தால் மட்டும் பத்தாது, கள நிலவரத்தை சுகாதாரத்துறை அமைச்சர் உணர வேண்டும். இந்த ஆட்சியை விமர்சனம் செய்தும் இனி பயனில்லை. இரண்டரை ஆண்டுகள் முடிந்து விட்டது, இனியாவது அரசும், சுகாதாரத் துறையும் விழிப்போடு செயல்பட வேண்டும்.

கடந்த ஆட்சிக் காலத்தில் பல் மருத்துவக் கல்லூரி புதுக்கோட்டையில் தொடங்குவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டரை ஆண்டு காலம் முடிந்த பிறகும், இதுவரை பல் மருத்துவக் கல்லூரியினை தொடங்குவதற்குத் தாமதமாகி வருகின்றது. தற்போது இதனை நான் சுட்டிக்காட்டி உள்ளேன். விரைவில் இந்த மருத்துவக் கல்லூரியைத் திறப்பதற்கு முடிவு எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. சுகாதாரப் பணிகளை விரைவுபடுத்துவது மட்டுமல்லாமல், அனைத்துத் துறைகளிலும் ஒருங்கிணைத்து ஆய்வுக் கூட்டங்கள் மாவட்டம்தோறும் நடத்த வேண்டும். அப்போதுதான் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து டெங்குவை ஒழிக்க முடியும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிமுக - பாஜக கூட்டணி என்னாச்சு?.. மனம் திறந்த ஓபிஎஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.