ETV Bharat / state

மருத்துவமனை இணை இயக்குநர் சஸ்பெண்ட் விவகாரம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீது விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு

author img

By

Published : Jul 21, 2023, 8:03 AM IST

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தன்னை முன்னிலைப்படுத்துவதற்காக இணை இயக்குநர் ஒருவரை பழிவாங்கும் நடவடிக்கையாக சஸ்பெண்ட் செய்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீது சி.விஜயபாஸ்கர் பகீர் குற்றச்சாட்டு

புதுக்கோட்டை: விலைவாசி உயர்வைக் கண்டித்து புதுக்கோட்டையில் அதிமுக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று (ஜூலை 20) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காய்கறி விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் காய்கறி மாலை அணிந்து தமிழ்நாடு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு: இந்தக் கூட்டத்தில் பேசிய விஜயபாஸ்கர், 'விண்ணை முட்டும் அளவிற்கு விலைவாசி உயர்ந்துள்ளதை திமுக அரசு கண்டு கொள்வதாக தெரியவில்லை. அவர்கள் கவனம் முழுவதும் டாஸ்மாக் கடையில்தான் உள்ளது. டாஸ்மாக் சரக்கை பத்து ரூபாய் பாட்டிலுக்கு கூட வைத்து விற்பவர் தற்போது புழல் சிறையில் உள்ளார்.

ரோட்டிற்கு வந்தால்தான் உரிமைத்தொகையா? வரும் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வருவதற்குண்டான வாய்ப்புகள் உள்ளது. அப்போது அதிமுக நிச்சயம் வெற்றி பெறும்” என்றார். அப்போது கூட்டத்தில் இருந்த பெண்கள், ‘மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தற்போது அரசு விதித்துள்ளது. மகளிர் உரிமைத்தொகை எங்களுக்கு எல்லாம் கிடைக்காது. அதேபோன்று பேருந்தில் இலவச பயணம் செல்பவர்களை ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கேவலமாக பார்க்கின்றனர். இலவச பயணம் நாங்கள் கேட்கவில்லை” என கேள்வி எழுப்பினர். அதற்கு வீட்டில் உள்ளவர்கள் ரோட்டிற்கு வந்தால்தான் உரிமைத்தொகை கிடைக்கும்போல் உள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.

மருத்துவத்துறை இணை இயக்குநர் பணியிடை நீக்கம்: இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய்பாஸ்கர், நிர்வாக சீர்கேட்டால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து துறைகளும் சீர்கெட்டு போனதாக குற்றம் சாட்டினார். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் இதுவரை ஏன் பட்டமளிப்பு விழா நடத்தவில்லை என்று கடந்த ஆர்ப்பாட்டத்தில் தான் கேள்வி எழுப்பிய பிறகுதான், நேற்று மருத்துவப் படிப்பு முடித்து முதல் பேட்ச் வெளியே செல்பவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நேற்று புதுக்கோட்டைக்கு வந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அன்னவாசல் மருத்துவமனையை ஆய்வு செய்து மருத்துவரை பணியிட மாற்றம் செய்தும், மருத்துவத்துறை இணை இயக்குநரை பணியிடைநீக்கம் செய்தும் உத்தரவிட்டுள்ளார்.

தையும் படிங்க: 17 வயது சிறுமி கருக்கலைப்பு விவகாரம் - ரூ.12 லட்சம் லஞ்சம் பெற்ற ஆய்வாளர் சஸ்பெண்ட்

பழிவாங்கும் நடவடிக்கை: ஆனால், சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து அரசு மருத்துவமனையிலும் இது போன்ற நிலை உள்ளதாகவும், இவ்வாறு அனைத்து மருத்துவமனைகளிலும் அமைச்சர் ஆய்வு செய்தால், அனைவரையும் சஸ்பெண்ட் செய்தால் இவர்களுடைய ஆட்சியையும் சஸ்பெண்ட் செய்யும் நிலைதான் வரும் என்றும் விமர்சித்தார்.

மருத்துவர்களை பழிவாங்கும் நடவடிக்கையை விடுத்து அவர்களை அரவணைத்துச் செல்ல வேண்டும் என்றும், தலைமை திறனற்ற முறையில் செயல்பட்டால் கீழே பணியாற்றுபவர்களும் அதேபோலத்தான் இருப்பார்கள் என்றும் கடுமையாக சாடினார்.

தற்போது சுகாதாரத்துறையில் மருத்துவர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளதாகவும், இதனை போக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார். அதிமுக ஆட்சிக் காலத்தில் ஆண்டிற்கு நான்காயிரம் மருத்துவர்கள், பணியாளர்கள் ஆகியோர் இருந்ததாகவும், ஆனால் திமுக ஆட்சியில் இவர்கள் பணியமர்த்தப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

அமைச்சருக்கு திறமையில்லாததை காட்டுகிறது: மேலும், மருத்துவர்கள் இணை இயக்குநரையும் குறை சொல்வது அமைச்சரின் திறன் இல்லாததை காட்டுவதாகவும், அமைச்சரை முன்னிலைப்படுத்துவதற்காக இணை இயக்குநரை சஸ்பெண்ட் செய்துள்ளதாகவும், எனவே இது கண்டிக்கத்தக்கது என்றும் கூறினார். இணை இயக்குநரை அவ்வளவு எளிதாக சஸ்பெண்ட் செய்ய முடியாது என்றும், இதற்கான சரியான விளக்கத்தை கேட்டிருக்க வேண்டும் என்றும், அதன் பிறகே சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஸ்டாலினை மீண்டும் முதல்வராக்குவோம்; திண்டுக்கல் சீனிவாசன் உளறல் - அதிமுகவினர் கதறல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.