புதுக்கோட்டை மாவட்டம் கந்தவர்கோட்டையில் நடைபெற்ற பாஜக கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாடு முழுவதும் பாஜக எழுச்சியடைந்துள்ளது. மொழிக்கொள்கையில் பிரச்னைகளை ஏற்படுத்தி நாட்டின் ஒற்றுமையைப் பிளவுபடுத்தும் திமுகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
மத்திய அரசு விவசாயிகளுக்கு கிசான் திட்டத்தின் மூலமாக நேரடியாக உதவிகளை வழங்கிவரும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது வேதனைக்குரியது.
முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரும் மிகவும் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். தேசியம்தான் பாஜகவின் இலக்காக உள்ளது. இருமொழிக் கொள்கைதான் வேண்டுமென பேசுவோர் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) போன்ற பள்ளிகளிலிருந்து தங்களது குடும்பத்தினரின் பிள்ளைகளை சமச்சீர் பள்ளிகளில் சேர்த்துவிட்டுப் பேசட்டும். இல்லையென்றால் புதிய கல்விக் கொள்கையை ஆதரிக்க வேண்டும்.
எந்தக் கூட்டணி அமைந்தாலும் பாஜக இல்லாமல் தமிழ்நாட்டில் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் அடுத்த யாரும் ஆட்சி அமைக்க முடியாது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'புதிய கல்வி கொள்கைக்கு எதிராக மவுனப் போராட்டம்' - பாஜக உறுதி