புதுக்கோட்டை: திருமயம் ஒன்றியத்திற்குள்பட்ட ஆயங்குடி ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் ராஜமாணிக்கம். இவர் மீது ஏற்கனவே நான்கு மோசடி வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் ராஜமாணிக்கம் 10-க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 35 லட்சம் ரூபாய்க்கு மேல் பெற்றுக்கொண்டு வெளிநாட்டிற்கு அனுப்பவில்லை, வாங்கிய பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர்கள் புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின்பேரில் நகர காவல் துறையினர் ஆயங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் ராஜமாணிக்கம் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து அவரைக் கைதுசெய்தனர்.
இதையும் படிங்க: கர்ப்பமடைந்த மாணவி மரணம்: மறைத்த தலைமையாசிரியர், வார்டன் கைது