ETV Bharat / state

'அடிப்படை வசதிகளை செய்து கொடுங்கள்'- மாணவர்கள் சாலை மறியல் - aranthaangi government arts college

புதுக்கோட்டை: ஆவுடையார் கோவில் அருகே உள்ள அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மாணவர்கள் சாலை மறியல்
author img

By

Published : Jul 11, 2019, 8:36 PM IST

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்ட அரசு கலைக் கல்லூரியில் குடிநீர் வசதி,கழிப்பிட வசதி, தண்ணீர் வசதி மற்றும் சுற்றுச்சுவர் உட்பட பல்வேறு அடிப்படை வசதிகளைத் தமிழ்நாடு அரசு செய்யாமலேயே கல்லூரி நடத்தி வந்திருக்கிறது.

இதனால் மிகவும் சிரமத்துக்கு உள்ளான மாணவ மாணவிகள் அடிப்படை வசதிகளைச் செய்து தரக்கோரி அறந்தாங்கி ஆவுடையார் கோவில் சாலையில் பேருந்துகளை மறித்து மறியலில் ஈடுபட்டனர்.

மாணவர்கள் சாலை மறியல்

தகவலறிந்து அங்கு வந்த அறந்தாங்கி காவல்துறை கண்காணிப்பாளர் கோகிலா மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் ஆவுடையார்கோவில் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Intro:Body:புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகே பெருநாவலூர் அரசு கலைக் கல்லூரியில் பயிலும் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்.

அறந்தாங்கி அருகே அரசு கலை கல்லூரி மாணவர்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி சாலை மறியல் செய்தனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திறக்கபட்ட அரசு கலை கல்லூரியில் குடிநீர் வசதி,கழிப்பிடவசதி, தண்ணீர்வசதி மற்றும் சுற்றுசுவர் உட்பட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அறந்தாங்கி ஆவுடையார் கோவில் சாலையில் கல்லூரி மாணவர்கள் பஸ் மறியல் செய்தனர்.

பின்னர் அங்குவந்த அரசு அதிகாரிகள், அறந்தாங்கி காவல்துணை
கண்கானிப்பாளர் கோகிலா,மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி மாணவர்களை கலையச்செய்தனர்.

இதனால் அறந்தாங்கி
ஆவுடையார்கோவில் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து
பாதிக்கபட்டது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.