தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், விஜய் மக்கள் மன்றம் என்ற அமைப்பின் மூலம் மாவட்ட வாரியாக ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார்.
இந்நிலையில் விஜய் மக்கள் மன்றத்தின் புதுக்கோட்டை மாவட்ட தலைவராக இருப்பவர் முகமது பர்வேஸ். அதோடு சிவகங்கை மாவட்ட பொறுப்பாளராகவும் புதுக்கோட்டை மாவட்ட 4வது வார்டு நகர் மன்ற உறுப்பினராகவும் உள்ளார். 15 ஆண்டுகளுக்கு மேல் விஜய் மக்கள் மன்றத்தில் பணியாற்றி வருபவர் பர்வேஸின் தந்தை ஜவஹர் அலி(65) நேற்று(டிச.14) காலமானார்.
இதையறிந்த நடிகர் விஜய் பர்வேஸை செல்போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார். விஜயின் இந்த செயலை அறிந்த அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவரை கொண்டாடி வருகின்றனர். 'தோள் கொடுக்கும் தோழன் தளபதி விஜய்' என புகழாரம் சூட்டியுள்ளனர்.
இதையும் படிங்க:IMDbயின் மிகவும் பிரபலமான இந்தியத் திரைப்படங்கள் 2022