ETV Bharat / state

புதுக்கோட்டையில் கரோனாவை அழிக்கும் ராக்கெட் ஓவியம் - தமிழ் செய்திகள்

புதுக்கோட்டை: ஆலங்குடி அருகே ராக்கெட்டுடன் கூடிய அப்துல்கலாமின் படத்தைக் காட்சிப்படுத்தி ஓவியர்கள், வரைந்துள்ள கரோனா விழிப்புணர்வு ஓவியம் காண்போரைக் கவர்ந்துள்ளது.

அப்துல்கலாமுடன் கரோனா விழிப்புணர்வு ஓவியம்

author img

By

Published : May 1, 2020, 12:38 PM IST

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே ராக்கெட் ஒன்று கரோனா வைரஸை அழிப்பதுபோல் காட்சிப்படுத்தி, ஓவியர்கள் வரைந்துள்ள கரோனா விழிப்புணர்வு ஓவியம் காண்போரைக் கவர்ந்துள்ளது. இதற்கு ஊராட்சி நிர்வாகத்தினரும் பக்கபலமாக இருந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் ஊராட்சியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொத்தமங்கலம் கடை வீதியில், மக்களுக்கு கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஓவியமானது ஊராட்சி நிர்வாகம், ஓவியர் சங்கத்தினரால் வரையப்பட்டுள்ளது.

கரோனா விழிப்புணர்வு ஓவியம்

மேலும் அந்த ஓவியத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் படம் வரையப்பட்டதோடு ராக்கெட் ஒன்று, கரோனா வைரஸை அழிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்று காண்போரைக் கவரும் வகையில் அமைந்திருந்தது.

அதேபோல் ஊராட்சித் தலைவர் சாந்தி தலைமையில் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி உறுப்பினர்கள், ஓவியர்கள் உள்ளிட்டோர் அந்த ஓவியத்தைச் சுற்றி நின்று, கரோனா விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

இந்நிலையில் கொத்தமங்கலம் கிராமத்தில் கரோனா உள்ளிட்ட எந்தவொரு நோய்த்தொற்றும் ஏற்படாத வகையில் ஊராட்சி நிர்வாகம் தொடர்ந்து செயல்பட அனைத்து மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும்; ஊராட்சி நிர்வாகத்தால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதையும் படிங்க: கனரக ஆலைகள் இயங்குவது எப்போது? - தொழிலதிபர்களுடன் மத்திய அமைச்சர் ஆலோசனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.