ETV Bharat / state

தண்டவாளத்தில் பழுதாகி நின்ற அரசு பஸ்... முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்ப்பு! - Karuveppilan railway gate

புதுக்கோட்டை கருவேப்பிலான் ரயில்வே கேட்டில் அரசுப் பேருந்து பழுதாகி தண்டவாளத்தில் நின்றதைத் தொடர்ந்து பேருந்தை பொதுமக்கள் இணைந்து தள்ளிச் சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

ரயில்வே கேட் தண்டவாளத்தில் பழுதாகி நின்ற அரசு பேருந்து

author img

By

Published : Jul 12, 2023, 5:31 PM IST

புதுக்கோட்டை ரயில்வே கேட் தண்டவாளத்தில் பழுதாகி நின்ற அரசு பேருந்து

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் கருவேப்பிலான் ரயில்வே கேட் திருச்சி - புதுக்கோட்டைக்கு வரும் வழித்தடமாக உள்ளது. இதில் சென்னை, திருச்சியிலிருந்து புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை, ராமநாதபுரம், ராமேஸ்வரம் வழித்தடங்களில் புதுக்கோட்டை மார்க்கமாக தினசரி 15க்கும் மேற்பட்ட ரயில்கள் இந்த ரயில்வே கேட்டை கடக்கின்றன.

இந்த ரயில்வே கேட்டை ரயில்கள் கடந்து செல்லும் போது, அந்த பகுதி கடுமையான போக்குவரத்துப் பாதிப்புக்கு உள்ளாகிறது. இதனால் அப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் எனப் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பல ஆண்டுகளாக கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஒவ்வொரு தேர்தலின்போதும், புதுக்கோட்டையில் இந்த ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என்று அனைத்து அரசியல் கட்சிகள் சார்பிலும் தேர்தல் வாக்குறுதியாக வைக்கப்பட்டு வருகிறது.

இதில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் செயல்பட புதுக்கோட்டை நகர் பகுதியில் கருவேப்பிலான் ரயில்வே கேட் மற்றும் திருவப்பூர் ரயில்வே கேட்டிற்கான ரயில்வே மேம்பாலங்கள் தேவைப்படும் நிலையில், பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு ஒரு ரயில்வே கேட்டிற்கு அரசு அனுமதி அளித்தது. ஆனால், அனுமதி அளித்து இரண்டு வருடங்களான நிலையில் இன்னும் அந்தத் திட்டம் கிடப்பிலேயே உள்ளது.

இந்த நிலையில் இன்று (ஜூலை 12) புதுக்கோட்டையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசுப் பேருந்து, திடீரென ரயில்வே கேட் தண்டவாள நடுப்பகுதியில் பழுதாகி நின்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக பேருந்தை விட்டு கீழே இறங்கினர்.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காரைக்குடியில் இருந்து திருச்சி நோக்கி அதே நேரத்தில் கடக்க இருந்த ரயில், புதுக்கோட்டை ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
பின் பழுதாகி நின்ற பேருந்தை பொதுமக்கள் ஒன்று சேர்ந்து, ரயில் தண்டவாளத்தில் இருந்து தள்ளிச் சென்றனர். அதன் பின் வழக்கம் போல காரைக்குடியில் இருந்து திருச்சி நோக்கி சென்ற ரயில், புதுக்கோட்டை கருவேப்பிலான் ரயில்வே கேட்டை கடந்து சென்றது.

இதன் காரணமாக கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக, அந்தப் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும், கடந்த சில நாட்களாகவே பல்வேறு இடங்களில் ரயில் தொடர் விபத்து காரணமாக மக்கள் பெரும் அச்சத்தில் உள்ள நிலையில், ரயில் வரும் நேரத்தில் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற அரசுப் பேருந்து திடீரென பழுதாகி ரயில் தண்டவாளம் இடையே நின்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: "அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு" - முதலமைச்சர் மத்திய அமைச்சருக்கு கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.