புதுக்கோட்டை: கந்தர்வகோட்டை அருகே உள்ள அறியானிப்பட்டியில் முன்கால்கள் இல்லாமல் பிறந்த கன்றினை மனிதாபிமானம் இல்லாமல் யாரோ மூட்டை கட்டி வீசிச்சென்றுள்ளனர். பின்னர் அந்த கன்று கத்தும் சத்தத்தைக் கேட்ட அப்பகுதியினர் அறியானிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் ரமேஷுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலையடுத்து அப்ப பகுதிக்குச் சென்ற ஊராட்சி மன்றத் தலைவர் மூட்டையிலிருந்து கன்றினை மீட்டு அப்பகுதியில் உள்ள சிவன் கோயிலுக்கு எடுத்துச்சென்று, பின்னர் இதுகுறித்து தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த வீரமணி என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்ற வீரமணி இரண்டு முன் கால்கள் இல்லாமல் பிறந்த கன்றினை மீட்டு பால் உள்ளிட்டவைகளை கொடுத்து கன்றினை பராமரிப்பதற்காக எடுத்துச்சென்றார். முன்கால்கள் இல்லாமல் பிறந்த கன்றினை தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த வீரமணி மீட்டு பராமரிக்க எடுத்துச்சென்றது அப்பகுதியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: 21ஆம் நூற்றாண்டிலும் இப்படி ஒரு அவலம்: ஒதுக்கப்பட்ட குடும்பம்; கலெக்டர் ஆபிஸில் குடியேற முயற்சி