ETV Bharat / state

பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய சிறுவன்: நெகிழ்ந்த காவல் துறையினர்!

author img

By

Published : Apr 8, 2020, 8:13 PM IST

புதுக்கோட்டை: அறந்தாங்கியில் 12 வயது சிறுவன் தன்னுடைய பிறந்தநாளில் கரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் காவல் துறையினர், நகராட்சி பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பிஸ்கட் அளித்தது அனைவரையும் வியக்க வைத்தது.

போலிசாருக்கு பிஸ்கட் , சாக்லெட் கொடுக்கும் சிறுவன் தியாகு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எழில் நகர் பகுதியைச் சேர்ந்த தியாகு, லோகு தம்பதியரின் மகன் வர்கீஸ். ஆறாம் வகுப்பு படிக்கும் இவருக்கு இன்று பன்னிரெண்டாவது பிறந்தநாள் விழா கொண்டாடப்படவிருந்தது. பிறந்தநாளுக்கு அவரின் தந்தை ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தபோது, பிறந்தநாளை வழக்கமான முறையில் வீட்டில் கொண்டாடமால், கரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவல் துறையினருக்கும், துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருக்கும் நகராட்சி பணியாளர்களுக்கும் ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று சிறுவன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

அதைக் கேட்ட அவரது தந்தை தியாகு, உடனடியாக கடைக்குச் சென்று இரண்டு பிஸ்கெட் பாக்கெட் பெட்டிகளும், தண்ணீர் பாட்டிலும் வாங்கி வந்து மகனிடம் கொடுத்துள்ளார். மிகுந்த மகிழ்ச்சியடைந்த அச்சிறுவன் தந்தையை அழைத்துக் கொண்டு பிஸ்கட், தண்ணீருடன் கிளம்பியிருக்கிறார் .

அறந்தாங்கி முழுவதும் சுற்றிய சிறுவன், கண்ணில் பட்ட காவலர்கள், நகராட்சி பணியாளர்கள், ஆதரவற்றவர்கள் என பலருக்கும் பிஸ்கட் பாக்கெட், தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை சில்வர் தட்டில் வைத்துக் கொடுத்துள்ளார். சிறுவனின் இச்செயலைக் கண்டு நெகிழ்ந்த மக்கள், அன்பு கலந்த வார்த்தையில் பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறினர்.

காவல் துறையினருக்கு பிஸ்கட், தண்ணீர் கொடுக்கும் சிறுவன் வர்கீஸ்

இதுதொடர்பாக பேசிய சிறுவன் வர்கீஸ், “எங்கள் விடுமுறையில் அனைவரும் ஜாலியாக இருக்கிறோம். ஆனால் காவல் துறையினர் துப்புரவுத் தொழிலாளர்கள், மருத்துவர்கள் ஆகியோர் தான் மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்கிறார்கள். என்னால் முடிந்ததை நான் செய்கிறேன். அது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இத்தனை நாள் வீட்டில் கோலாகலமாகக் கொண்டாடிய பிறந்தநாளை விட இன்று கொண்டாடிய பிறந்தநாளே பெருமகிழ்ச்சியை தந்தது” என்றார்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.