ETV Bharat / state

"தொழில் முதலீடுகள் குறித்து திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்" - ஈபிஎஸ் வலியுறுத்தல்! - eps crticized dmk govt

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 8, 2024, 8:51 PM IST

EPS Criticized Dmk Govt: திமுக ஆட்சியில் கூறப்படும் தொழில் முதலீடுகள் குறித்த தொகை எதுவும் வெளிப்படைதன்மையாக இல்லை. அதனால்தான் அதிமுக உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளுமே வெள்ளை அறிக்கை வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றன என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி (Credits - ETV Bharat Tamil Nadu)

புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் ஒரே பள்ளியில் படித்த 5 மாணவர்கள் தேர்வாகி உள்ளனர். தேர்வாகிய மாணவர்களுக்கு பாராட்டு விழா, அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்றது. இதில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஸ்டெதஸ்கோப், இனிப்புகள் வழங்கி பாராட்டினார்.

எடப்பாடி பழனிசாமி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

பின்னர் செய்தியாளரிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "7.5% இட ஒதுக்கீட்டிற்கு மாணவ மாணவிகள் மருத்துவ படிப்பு படிப்பதற்கு அதிமுக ஆட்சி காலத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. கடந்த 2018 - 19ம் ஆண்டு அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களில் 9 பேர் மட்டுமே நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பில் சேர்ந்தனர். இந்த நிலை மாற வேண்டும் அதுமட்டுமின்றி கிராமப்புற மாணவர்களின் மருத்துவராக வேண்டும் என்ற கனவு நிறைவேற வேண்டும் என்பதற்காக தான் 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது.

ஏழு மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், அதிமுக ஆட்சிக்காலத்தில் ரூ.700 கோடி மதிப்பில் காவேரி- வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் தொடங்கியது. அதிமுக காலத்தில் தொடங்கப்பட்ட திட்டம் என்பதாலேயே தற்போது திமுக அரசு இந்த திட்டத்தை முடக்கியுள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சி வந்தவுடன் காவேரி-வைகை- குண்டாறு இணைப்பு திட்டம் விரைவாக பணிகள் நடைபெற்று திட்டம் நிறைவேற்றப்படும்.

அரசியல்வாதிகளுக்கும், பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும் இந்த ஆட்சியில் பாதுகாப்பில்லை சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. திறமை அற்ற முதல்வர் நாட்டை ஆண்டு வருகிறார். நாங்கள் ஆட்சியில் இருந்தபோது தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

அதிமுக ஆட்சி காலத்தில் முதலீடுகளை ஈர்த்தது வெளிப்படையாக தெரிந்தது. இப்போது இந்த ஆட்சியில் கூறப்படும் தொழில் முதலீடுகள் குறித்த தொகை எதுவும் வெளிப்படை தன்மையாக இல்லை. அதனால்தான் நாங்கள் மட்டுமல்ல அனைத்து எதிர்கட்சிகளுமே வெள்ளை அறிக்கை வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர். உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி, அதிமுக சந்திப்பதற்கு தயாராக உள்ளது" என்று ஈபிஎஸ் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க : உள்ளாட்சித் தேர்தல்: கலெக்டர்களுக்கு பறந்த உத்தரவு; சைலன்ட்டாக தயாராகும் தேர்தல் ஆணையம்! - tn local body election

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.