புதுக்கோட்டை மாவட்டம் திருக்கட்டளை பகுதியில் சண்முகநாதன் என்பவர், சுத்தமான குடிநீர் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், உணவு பாதுபாப்புத்துறையினர் அந்நிறுவனத்தில் திடீர் சோதனை நடத்தினர். அதில், நிறுவனத்தில் தயாரித்து வைக்கப்பட்டிருந்த 300 மி.லி. மற்றும் 500 மி.லி. அளவுகொண்ட 7 ஆயிரத்து 160 தண்ணீர் பாட்டில்களையும், 20 லிட்டர் அளவுகொண்ட 45 கேன்களையும் தயாரிப்பு தேதி மற்றும் உரிய தரச்சான்றுகள் இல்லாததால் பறிமுதல் செய்தனர். மேற்படி குடிநீர் நிறுவனம் உணவுப் பாதுகாப்புத்துறை உரிமம் பெற்ற, பின்னரே உற்பத்தி செய்ய அனுமதி வழங்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு கூறுகையில்,'குடிநீர் தயாரிப்பாளர்கள் உணவுப் பாதுகாப்புத்துறை உரிமம், BIS சான்றிதழ் இல்லாமல் குடிநீர் தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது' என்றார்.
இதையும் படிங்க:பிரபல ஜவுளி நிறுவன ஊழியர் அடித்துக் கொலை - உரிமையாளர் மீது உறவினர்கள் புகார்