ETV Bharat / state

வேங்கைவயல் வழக்கு: 4 சிறுவர்களிடன் இரத்த மாதிரி சேகரிப்பு... விசாரணை நிலை என்ன? - 4 boys Blood sample collect at Vengaivayal village

வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக 4 சிறுவர்களுக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டிஎன்ஏ பரிசோதனைக்கான ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது.

Vengaivayal issue
வேங்கைவயல் வழக்கு
author img

By

Published : Jul 21, 2023, 2:15 PM IST

புதுக்கோட்டை: முத்துக்காடு ஊராட்சிக்குட்பட்ட வேங்கைவயலில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பட்டியல் இன மக்கள் பயன்படுத்தக்கூடிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இச்சம்பவம் நடைபெற்று 200 நாட்கள் ஆகி உள்ள நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சூழ்நிலையிலும் இதுவரை குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை. இந்நிலையில் தான் குற்றவாளிகளை கண்டறிய சிபிசிஐடி போலீசார் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள முடிவெடுத்து நீதிமன்றத்தை நாடிய நிலையில், புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம், முதற்கட்டமாக 11 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள ரத்த மாதிரிகள் எடுக்க அனுமதி கொடுத்தது.

அதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி 11 பேரை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருமாறு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். அதில் அன்று 3 பேர் ஆஜரான நிலையில், வேங்கைவயலை சேர்ந்த பட்டியலின மக்கள் 8 பேர் ஆஜராகவில்லை.

பின்னர் அந்த 8 பேரும் ரத்த மாதிரிகள் கொடுக்காமல் இருந்த நிலையில், பின்னர் சிபிசிஐடி போலீசார் மேலும் 10 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றத்தில் அனுமதி பெற்று அந்த 10 பேருக்கும் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள ரத்த மாதிரியும், அதேபோல் இருவருக்கு குரல் மாதிரி பரிசோதனையும் செய்து சென்னையில் உள்ள அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனையடுத்து டிஎன்ஏ பரிசோதனைக்கு ரத்த மாதிரி கொடுக்க மறுப்பு தெரிவித்த வேங்கை வயல் பகுதியைச் சேர்ந்த 8 பேரில் ஒருவரான முத்துகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையை நாடி பாதிக்கப்பட்ட மக்களையே போலீசார் பரிசோதனைக்குட்படுத்த முயல்வதாக வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கின் அடிப்படையில் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள மறுப்பு தெரிவித்த 8 பேரும் வழக்கு விசாரணை நடைபெறும் புதுக்கோட்டை வன்கொடுமை நீதிமன்றத்தையே நாடி தீர்வு காணலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி இளங்கோவன் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட 8 பேரும் கடந்த 30ம் தேதி புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

ஆஜரானவர்களிடம் சிபிசிஐடி போலீசார் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்வதற்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு நகலை சம்பந்தப்பட்ட 8 நபர்களிடமும் நீதிபதி ஜெயந்தி வழங்கி அதனைப் படித்துப் பார்த்து அதில் ஏதேனும் ஆட்சேபணை இருந்தால் கடந்த 1 ஆம் தேதி மீண்டும் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி தங்களது விளக்கத்தை தெரிவிக்கலாம் என்று கூறி அந்த 8 பேரையும் அனுப்பி வைத்தார்.

அதன்பின் கடந்த 1ம் தேதி சம்பந்தப்பட்ட 8 பேரும் மீண்டும் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர். மேலும் இவர்களுடன் இந்த வழக்கு விசாரணையை நடத்தி வரும் சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டியும் ஆஜரான நிலையில் டிஎஸ்பி பால்பாண்டியிடம் நீதிபதி இந்த வழக்கில் டிஎன்ஏ பரிசோதனை எதனால் செய்யப்படுகிறது என்று கேட்டார்.

அதற்கு டிஎஸ்பி பால்பாண்டியன் இந்த வழக்கை பொறுத்தவரை அறிவியல் பூர்வமாக அணுக வேண்டிய நிலை உள்ளதால் அந்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட 8 பேருக்கு மட்டும் டிஎன்ஏ பரிசோதனை எடுக்க அனுமதி கேட்கவில்லை என்றும், அந்த பகுதி கிராமங்களைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதன் பின்னர் சம்பந்தப்பட்ட 8 பேரிடம் தனித்தனியாக எதற்காக டிஎன்ஏ பரிசோதனை எடுக்க மறுப்பு தெரிவிக்கிறீர்கள் என்று நீதிபதி ஜெயந்தி கேள்வி எழுப்பினர். அப்போது அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களையே விசாரணைக்குட்படுத்தி டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்வதாகவும், அதனால் டிஎன்ஏ பரிசோதனைக்கு மறுப்பு தெரிவிப்பதாக 8 பேரும் தனித்தனியாக ஒரே பதிலை தெரிவித்தனர்.

இதனை ஏற்ற நீதிபதி இந்த வழக்கில் கடந்த ஜூலை 4ம் தேதி உத்தரவு பிறப்பித்ததாக கூறியிருந்தார். அதன் அடிப்படையில் வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த 8 பேரும் கடந்த ஜூலை 4ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதேபோல் சிபிசிஐடி போலீசார் தரப்பில் ஆய்வாளர் புவனேஸ்வரி ஆஜரானார்.

அதன்பின் இந்த வழக்கு குறித்து எடுக்கப்பட்ட முடிவு அடிப்படையில் டிஎன்ஏ மாதிரி பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்த வேங்கை வயல் கிராமத்தை சேர்ந்த 8 பேரும் டிஎன்ஏ பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இதற்காக மறுநாள் (ஜூலை 5ம் தேதி) 8 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இரத்த மாதிரி கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

இதனையடுத்து கடந்த 5ம் தேதி வேங்கை வயல் கிராமத்தைச் சேர்ந்த 8 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டிஎன்ஏ பரிசோதனைக்கான இரத்த மாதிரி எடுக்கப்பட்டது. வேங்கைவயல் வழக்கு சம்பந்தமாக இதுவரை அந்த பகுதியைச் சேர்ந்த 21 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனைக்கான ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி போலீசார் 4 சிறார்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய அனுமதி கேட்டு புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர்.

இதனையடுத்து இறையூர் வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த 4 சிறுவர்களின் பெற்றோர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 16 வயதுடைய சிறுவன் தரப்பில் ஆஜரான வக்கீல் டிஎன்ஏ பரிசோதனைக்கு ஆட்சேபனை தெரிவித்து நீதிபதியிடம் கூறினார். மேலும் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன் வழங்கியது எப்படி எனவும் கேள்வி எழுப்பினர். மேலும் இறையூரை சேர்ந்த 3 சிறுவர்களின் பெற்றோரும் ஆஜராகி இருந்தனர்.

அப்போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள ஆட்சேபனை தெரிவித்ததை தொடர்ந்து, இந்த வழக்கை, கடந்த ஜூலை 14ம் தேதிக்கு புதுக்கோட்டை வன்கொடுமை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி ஒத்திவைத்தார். அதைத் தொடர்ந்து கடந்த 14ம் தேதி மாலை 4.30 மணியளவில் சம்பந்தப்பட்ட 4 சிறுவர்களும் பெற்றோர்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராயினர்.

அந்த 4 சிறுவர்களுக்கும் டிஎன்ஏ பரிசோதனை செய்ய சிபிசிஐடி போலீசார் அனுமதி கேட்டு இருந்த நிலையில், நான்கு சிறுவர்களின் பெற்றோர்களும் டிஎன்ஏ பரிசோதனைக்கு சம்மதம் தெரிவித்தனர். இந்நிலையில், சிபிசிஐடி போலீசாரின் அனுமதி கேட்டு உள்ள மனுவின் மீது வரும் (ஜூலை) 17ம் தேதி உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி ஜெயந்தி கூறி வழக்கை ஒத்திவைத்தார்.

இதனையடுத்து சிறுவர்கள் 4 பேரும் கடந்த 17ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், டிஎன்ஏ பரிசோதனைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தது. மேலும் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், பெற்றோர்கள், குழந்தைகள் என அனைவரும் ஒன்றாக கலந்தாலோசித்து ரத்த மாதிரி சேகரிப்புக்கான தேதியை அறிவிக்கவும் என்று நீதிபதி சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் சிறுவன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மலர்மன்னன் ரத்த மாதிரி சேகரிக்க அனுமதி வழங்கியதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல் முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், பெற்றோர்கள், குழந்தைகள் என அனைவரும் ஒன்றாக கலந்தாலோசித்ததில் (இன்று) ஜூலை 21ம் தேதி ரத்த மாதிரி சேகரிப்புக்கப்படும் என தெரிவித்திருந்தனர்.

அதைத் தொடர்ந்து, இன்று காலை புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இறையூரைச் சேர்ந்த 3 சிறுவர்களும், வேங்கைவயலைச் சேர்ந்த 1 சிறுவனும் என மொத்தம் 4 சிறுவர்களும் ஆஜராகினர். அதைத் தொடர்ந்து அவர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனைக்கான ரத்த மாதிரி எடுக்கப்பட்டது.

உலகையே உலுக்கிய வேங்கைவயல் சம்பவ வழக்கில் பல்வேறு கட்ட விசாரணை நடைபெற்று வரும் சூழலில் ஏற்கனவே 21 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனைக்கு ரத்த மாதிரியும், இருவருக்கு குரல் மாதிரி பதிவு சோதனையும் செய்துள்ளது. தற்போது 4 சிறுவர்களுக்கு ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டிருப்பது, இந்த வழக்கின் தீவிரத்தை காட்டியுள்ளது.

இதையும் படிங்க: தஞ்சையில் பியூட்டிஷியன் கொலை வழக்கில் திருப்பம்.. காதலனே கொலை செய்தது அம்பலம்.. நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.