பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வயலூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவருடைய மகன் டீசல் ராஜா. இவர் கடந்த நவம்பர் 16ஆம் தேதி திருமாவளவன் குறித்து அவதூறாக வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
இணையத்தில் அந்த வீடியோவானது வைரலாகப் பரவியதையடுத்து அதனை பதிவிட்ட இளைஞரை கைது செய்யக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர். இதனிடையே தவறாக வீடியோ வெளியிட்ட டீசல் ராஜா மீது குன்னம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று அவரை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: திருமாவளவன் குறித்து அவதூறு பதிவு - தாக்குதல் நடத்திய விசிகவினர்