பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே ஆத்தூர் செல்லும் சாலையின் ஓரமாக கட்டப்பட்டுவரும் கடையின் முன்பு 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் தலை,முகம் சிதைந்த நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
இது குறித்து தகவலறிந்த சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த காவல் துறையினர், இளைஞரின் உடலை கைப்பற்றி, உடல்கூறாய்விற்கு பெரம்பலூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதனையடுத்து கொலை செய்யப்பட்ட இளைஞர் யார் என்பது குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரணை செய்துவருகின்றனர். இந்தக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.