பெரம்பலூர்: நாமக்கல் மாவட்டம் தோளூர்பட்டியைச் சேர்ந்தவர் குமார். இவர் பெரம்பலூர் அருகே எசனை அரசு பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்த மகாலெட்சுமி (35) என்பவருக்கும் திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகின்றது. இவர்களுக்கு ஜெயஸ்ரீ, மோனிகா என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் தற்போது பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட எளம்பலூர் சாலை முத்துநகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
இதனிடையே குமாருக்கும், மகாலெட்சுமிக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு காரணமாக சண்டை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் குமார் திருச்சிக்கு சென்றிருந்த நிலையில், மகாலெட்சுமி வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தனக்கு தானே தீ வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில் உடல் முழுவதும் எரிந்து, அவர சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
![Woman commits suicide to set fire herself for family issues in perambalur](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10213961_suicide.jpeg)
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பெரம்பலூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கடன் பிரச்னை: ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற நபர்!