பெரம்பலூர் மாவட்டத்தில் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவும், ஜனவரி இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. இதனிடையே பெரம்பலூரிலிருந்து அரியலூர் செல்லும் சாலையில் ஒதியம் பிரிவு ரோட்டில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்ட வாக்குச் சீட்டுகள் சாலையில் கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், சம்பவ இடத்திற்கு வந்த குன்னம் வட்டாட்சியர் சித்ரா, மருவத்தூர் காவல் துறையினர் வாக்குச் சீட்டுகள் சாலையில் கிடந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: