ETV Bharat / state

பெரம்பலூரில் பெய்த கனமழையால் நிறைந்த விசுவக்குடி நீர்த்தேக்கம்! - கனமழையால் நிறைந்த நீர்த்தேக்கம்

பெரம்பலூர்: புரெவி புயல் காரணமாக பெய்த கனமழையின் காரணமாக விசுவக்குடி நீர்த்தேக்கத்தில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கனமழையால் நிறையும் விசுவக்குடி நீர்த்தேக்கம்
கனமழையால் நிறையும் விசுவக்குடி நீர்த்தேக்கம்
author img

By

Published : Dec 4, 2020, 10:39 AM IST

புரெவி புயல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் கனமழை பெய்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று (டிச. 03) மட்டும்

  • செட்டிகுளம் - 59 மி.மீ.
  • பாடாலூர் - 43 மி.மீ.
  • அகரம் சீகூர் - 83 மி.மீ.
  • லப்பைகுடிக்காடு - 75 மி.மீ.
  • புது வேட்டக்குடி - 52 மி.மீ.
  • பெரம்பலூர் - 104 மி.மீ.
  • எறையூர் - 83 மி.மீ.
  • கிருஷ்ணாபுரம் - 64 மி.மீ.
  • தழுதாழை - 60 மி.மீ.
  • வி.களத்தூர் - 49 மி.மீ.
  • வேப்பந்தட்டை - 73 மி.மீ.
    என மொத்தம் - 745 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

இதனிடையே வேப்பந்தட்டை வட்டாரத்தில் தொடர் மழை காரணமாக விசுவக்குடியில் 33 அடி கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத்தில் தற்போது 13 அடி நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், அரும்பாவூர் பெரிய ஏரி ஏற்கனவே நிரம்பிய நிலையில் அரும்பாவூர் சித்தேரி, வடக்கலூர் ஏரி ஆகியவை நிரம்பின.

மேலும், ஆலத்தூர் வட்டம் மருதையாற்றில் வெள்ளப்பெருக்கால் ஆதனூர் - கொட்டரை தரைப்பாலத்தில் வெள்ள நீரானது பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், தெற்கு மாதவியில் உள்ள ஏரி உள்ளிட்ட பல ஏரிகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

இதையும் படிங்க: திருப்பத்தூரில் கனமழை: 2 வீடுகள் இடிந்து சேதம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.