பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் விசுவக்குடி பகுதியில் சுமார் 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2015ஆம் ஆண்டு நீர்தேக்கம் அமைக்கப்பட்டது. பச்சை மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக விசுவக்குடி நீர்த்தேக்கத்தில் தற்போது 30 அடி வரை தண்ணீர் நிரம்பியுள்ளது.
இதையடுத்து பாசன வசதிக்காக இன்று (டிச. 19) தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் பிறகு சிறப்புப் பூஜைகளுக்குப் பின் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா, பெரம்பலூர் சட்டபேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வன், குன்னம் சட்டபேரவை உறுப்பினர் ஆர். டி ராமச்சந்திரன் ஆகியோர் மலர் தூவித் பாசனத்திற்காக தண்ணீரை திறந்துவிட்டனர். இந்தத் தண்ணீர் திறப்புக்குப் பின் விசுவக்குடி தொண்டமாந்துறை உள்ளிட்ட கிராமங்களுக்கு சுமார் 2, 000 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இந்நிகழ்வில் பொதுப்பணித்துறை அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க... வீடூர் அணை திறப்பு: 700 கனஅடி நீர் திறப்பு