ETV Bharat / state

தேர்தலில் வெற்றிபெற்றவர் உடல்நலக் குறைவால் மறைவு!

author img

By

Published : Jan 3, 2020, 11:31 AM IST

பெரம்பலூர்: ஆதனூர் ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றிபெற்ற வேட்பாளர் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

perambalur
perambalur

பெரம்பலூர் மாவட்டம் ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவேல் (எ) சின்னமணி (64). திமுக வேட்பாளரான இவர் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆதனூர் கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்.

இதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நேற்று எண்ணப்பட்ட நிலையில், சின்னமணி அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுப்பிரமணியைவிட 160 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.

பின்னர் வீடு திரும்பிய அவர், நேற்றிரவு உடல் நலக்குறைவு காரணமாக அரியலூர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு சிகிச்சைப் பெற்றுவந்த அவர் இன்று அதிகாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

ஊராட்சி மன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளதால் அடுத்த ஊராட்சி மன்றத் தலைவர் யார்? என்ற குழப்பம் கிராம மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 73 வயதில் ஊராட்சி மன்றத் தலைவரான மூதாட்டி!

Intro:பெரம்பலூர் அருகே ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றும் உடல் நலக் குறைவால் உயிரிழந்தார் ஊராட்சி மன்ற தலைவர் மணிவேல்.
கிராம மக்கள் சோகம்.Body:பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிவேல் (எ) சின்னமணி (திமுகவை சேர்ந்தவர்.

இவர் 1967அண்ணா ஆட்சியில் பெரம்பலூர் எம்எல்ஏவாக பதவி வகித்த வெங்கலம் மணி என்பவரது தம்பி ஆவார்.
இந்நிலையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஆதனூர் கிராம ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலுக்கு போட்டியிட்டார்.
இவரை எதிர்த்து சுப்ரமணி என்பவர் போட்டியிட்டார்
இதனிடையே வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில்
தன்னை எதிர்த்துப் போட்டி யிட்ட சுப்ரமணியை விட 160ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தார். ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்டார்.
மேலும் வெற்றி பெற்ற பின் அதற்கான சான்றிதலும் பெற்ற பின் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனையடுத்து

இரவு உடல் நலமின்றி அரியலூர் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டவர் அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மனைவி, 3மகள்,1மகன் உள்ளனர்.

Conclusion:தேர்தலில் வெற்றி பெற்ற பின் ஊராட்சி மன்ற தலைவர் இறந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.