கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பெரம்பலூர் நகராட்சி சர்பாக பொதுமக்கள் காய்கறிகள் தடையின்றி பெறுவதற்காக நடமாடும் காய்கறி வண்டி சேவையினை தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள் அடங்கிய தொகுப்பு பை நூறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை, மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் நகராட்சி ஆணையர் குமரி மன்னன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.