திருச்சி மாவட்டம் ஊட்டத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (70). இவர், தனது இருசக்கர வாகனத்தில் பெரம்பலூரை நோக்கி சென்றார். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, பின்னால் வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:லஞ்சம் பெற்ற வேலைவாய்ப்பு அலுவலக ஆணையர் கைது!