பெரம்பலூர் மாவட்டம் ஏரிக்கரை அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் பெரம்பலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராம்குமார் உள்ளிட்ட காவல் துறையினர், ஏரிக்கரை பகுதியில் சோதனை செய்தனர்.
அங்கு அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த பெரம்பலூர் சாமியப்பா நகரைச் சேர்ந்த துரை என்பவரது மகன் சுரேஷ் மற்றும் சங்கு பேட்டையைச் சேர்ந்த துரைசாமி என்பவரது மகன் சதீஷ் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும், அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.