பெரம்பலூர்: தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் இன்று (ஏப் 8) மதியம் பெரம்பலூர் மாவட்டத்தில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு, பலத்த இடி மற்றும் காற்றுடன் லேசான சாரல் மழை பெய்தது.
இந்த மழையின் போது பெரம்பலூர் அருகேயுள்ள கோனேரிபாளையம் பகுதியில் சாலையோரம் இளைஞர்கள் மூன்று பேர் ஒதுங்கி நின்றுள்ளனர். அப்போது திடீரென பலத்த இடியுடன் கூடிய மின்னல் தாக்கியதில், அவர்களில் ராமர் மற்றும் செல்லத்துரை ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் அவர்களுடன் ஒதுங்கி நின்று கொண்டிருந்த வெங்கடேசன் (18) என்பவர் காயத்துடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் டவுன் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த இருவரின் உடலை கைப்பற்றி உடர்கூராய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மதுபோதையால் நேர்ந்த விபரீதம்... ஆட்டோ மோதி மூதாட்டி உயிரிழப்பு...