பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் அனுக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ். இவர் சென்னையில் மின்வாரிய பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த ராமதாஸ் செட்டிகுளம் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் பிரபு என்பவரோடு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது, நகர்ப்புற பகுதியான பாலக்கரையில் ராமதாஸ் வந்த இருசக்கர வாகனத்தின் மீது பின்னால் வந்த டிப்பர் லாரி வேகமாக மோதியது.
இதில் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் விழுந்தனர். அவர்களின் மீது டிப்பர் லாரியின் சக்கரம் ஏறியதில் மின்வாரிய பொறியாளர் ராமதாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னால் அமர்ந்திருந்த பிரபு பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த ராமதாஸின் உடல், உடல் கூறாய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஊராட்சித் தலைவர் இருக்கையில் அமர்ந்து அடாவடி செய்த ஒன்றிய கவுன்சிலர்