ETV Bharat / state

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்! - Perambalur District News

பெரம்பலூர் : அரசுப் போக்குவரத்துக் கழகங்களை சீர்குலைக்கும் விதி திருத்தம் 288 ஏ-வை கைவிட வலியுறுத்தி அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Aug 18, 2020, 12:50 PM IST

பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், அரசு போக்குவரத்துக் கழகங்களை சீர்குலைக்கும் விதி திருத்தம் 288 ஏ-வை கைவிட வேண்டும். மேலும், இராணுவ ஆயுதங்கள் மற்றும் கருவிகளை உற்பத்தி செய்கிற இந்திய அரசுக்கு சொந்தமான 41 பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகளை தனியாரிடம் விற்கக் கூடாது, ரயில்வே உற்பத்தி பிரிவுகளையும், தனியாரிடம் ஒப்படைத்த 109 ரயில்வே போக்குவரத்து தடங்களையும் ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பல போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: கம்யூனிஸ்ட் கட்சி குறித்து அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.