ETV Bharat / state

பதவிகளை பெற்று செல்லும் தமிழ்நாடு பாஜக தலைவர்கள் - அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் - Transport Minister ss Sivasankar says BUS

தமிழ்நாடு பாஜக தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒரு பதவியை பெற்று செல்வதாகவும், அதேபோல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் முயற்சி செய்வதாக அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்

author img

By

Published : Jun 13, 2022, 9:16 AM IST

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டார பகுதிகளில் சாலை அமைக்கும் பணி, தொடக்கப் பள்ளிகளுக்கு நமக்கு நாமே திட்டத்தின் மூலம் மேசை நாற்காலி வழங்குதல், அணைப்பாடி சமுதாயக் கூடம் பூமி பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் நேற்று (ஜூன்.12) போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கலந்து கொண்டார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஜுன்13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் தேவைப்படுகின்ற இடங்களில் மாணவ-மாணவிகளின் வசதிக்காகக் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன, அரசு போக்குவரத்துக் கழகத்தில் காலி பணியிடங்கள் நிரப்புவது குறித்து கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது.

அண்ணாமலை ஏதாவது ஒரு பதவியை பெறுவதற்காகவே முயற்சிக்கிறார் - அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்

நிதித்துறையின் ஆலோசனையையும் முதலமைச்சர் அறிவுரையைப் பெற்று அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தை தொழிற்சங்கங்களுடன் நடைபெற்று வருகிறது. அது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதிலுள்ள இடர்பாடுகள் நீக்கப்படும்" என்றார்.

போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்
போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்

தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாடு பாஜக தலைவர் ஒவ்வொருவரும் ஒரு பதவியை பெற்று சென்று கொண்டிருக்கின்றனர். அது போல ஏதாவது ஒரு பதவியை பெறுவதற்காகவே அண்ணாமலை முயற்சி செய்து வருகிறார்" என தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 'திமுகவில் மேலும் மூன்று முதலமைச்சர்கள் உள்ளனர்..!' - எடப்பாடி பழனிசாமி

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.